கன்னியாகுமரி – நவ -17,2021
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஆறு, குளங்கள் உடைந்து வெள்ள பெருக்கு ஏற்பட்ட போது காவல்துறை, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் ஊர்காவல் படையினர் மிக சிறப்பாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு பொதுமக்களின் நன் மதிப்பை பெற்றனர். அவர்களை மதிப்பிற்குரிய காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு IPS நேரில் வந்து பாராட்டியிருந்தார் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் IPS மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் ஊர்காவல் படையினரை நேரில் வரவழைத்து பாராட்டி, மதிப்பிற்குரிய காவல்துறை தலைமை இயக்குநர் அறிவித்த வெகுமதியினை வழங்கினார்.