தூத்துக்குடி – நவ -08,2021
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவீண்குமார் அபிநபு, இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் இன்று திருச்செந்தூர் உதயம் மஹாலில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா 04.11.2021 முதல் 15.11.2021 வரை 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் நாளை (09.11.2021) சூரசம்ஹார விழா மற்றும் நாளை மறுநாள் (10.11.2021) திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் 09.11.2021 மற்றும் 10.11.2021 ஆகிய இரு நாட்களில் கோவிலுக்கு வர அனுமதி இல்லை. ஆகவே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் கோவிலுக்கு வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தந்து நாளை (09.11.2021) மற்றும் நாளை மறுநாள் (10.11.2021) ஆகிய இரு நாட்கள் கோவிலுக்கு வராமல் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சியை அனைத்து உள்ளுர் தொலைக்காட்சி மற்றும் பிரபல தொலைக்காட்சி மற்றும் You-tube சேனல்களிலும் நேரடியாக ஒளிப்பரப்பபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெறவுள்ள சூரசம்ஹார விழாவை முன்னிட்டு இன்று திருச்செந்தூர் உதயம் மஹாலில் வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து யார், யாருக்கு எந்தெந்த இடங்களில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், அவர்கள் செயலாற்ற வேண்டிய பணிகள் குறித்தும் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவீண்குமார் அபிநபு, இ.கா.ப அவர்கள் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த சூரசம்ஹார விழாவை முன்னிட்டு 4 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 18 உதவி மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், 56 காவல் ஆய்வாளர்கள் உட்பட 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் கோபி, கார்த்திகேயன், சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப, காவல் துணை கண்காணிப்பாளர்கள் மணியாச்சி சங்கர், மதுவிலக்கு பிரிவு பாலாஜி, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.