76 F
Tirunelveli
Sunday, December 5, 2021
முகப்பு மாவட்டம் திருச்சி "திருச்சியில் போக்குவரத்து நெரிசலை தவிர்‌‌‌க்‌‌‌க பஸ்‌‌‌களுக்‌‌‌கு புது ரூட்‌‌‌ போலீஸ்‌‌‌ கமிஷனர் அறிவிப்பு"

“திருச்சியில் போக்குவரத்து நெரிசலை தவிர்‌‌‌க்‌‌‌க பஸ்‌‌‌களுக்‌‌‌கு புது ரூட்‌‌‌ போலீஸ்‌‌‌ கமிஷனர் அறிவிப்பு”

திருச்சி – நவ-01,2021

செய்தியாளர் : எஸ்.எம்.பாரூக்

திருச்சி மாநகர காவல் ஆணையர் .கார்த்திகேயன், இ.கா.ப., இன்று “தீபாவளி” பண்டிகையை முன்னிட்டு, திருச்சியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதியும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், திருச்சி மாநகரில் தஞ்சாவூர் மார்க்கம், புதுக்கோட்டை மார்க்கம் மற்றும் மதுரை மார்க்கம் ஆகிய வழித்தடங்கில் செல்லும் பேருந்துகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில், மன்னார்புரம் சர்வீஸ் ரோட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை பார்வையிட்டு கண்டோன்மெண்ட் சரக காவல் உதவி ஆணையர், போக்குவரத்து தெற்கு சரக காவல் உதவி ஆணையர் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்
மேலும், திருச்சி மாநகரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மாநகர காவல் ஆணையர் அவர்கள் கீழ்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

  1. தேசிய நெடுஞ்சாலையில் எக்காரணத்தை கொண்டும் எவ்வித வாகனங்களையும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக்கூடாது.
  2. பேருந்துகளை அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிறுத்தத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றவேண்டும். போக்குவரத்து சிக்னல்களில் பயணிகளை இறக்கி, ஏற்றக் கூடாது.
  3. வேன்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் நிறுத்தவேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாலையோரங்களிலும் நிறுத்தக் கூடாது.
  4. வியாபாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்ரமித்து கடைகளை அமைத்து விற்பனை செய்யக் கூடாது.
  5. பட்டாசு வியாபாரம் செய்பவர்கள் அனுமதி பெற்ற இடத்தில் மட்டும்தான் விற்பனை செய்யவேண்டும். தரைக்கடை மற்றும் தள்ளுவண்டியில் வைத்து பட்டாசுகளை விற்பனை செய்ய கூடாது.

மேற்படி விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது பற்றிய தகவலை காவல் கட்டுப்பாட்டு அறை எண்:100-க்கும் மற்றும் மாநகர காவல் ஆணையர் Whatsapp No.9626273399-க்கும் தெரிவிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், பயணிகளின் நலன் கருதியும் திருச்சி மாநகரில் இன்று 01.11.2021 முதல் 07.11.2021 வரை தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் தற்காலிகப் பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படவுள்ளது.

19,724FansLike
55FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ரவுடிகளின்‌‌‌ செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட எஸ்பி தனிப்படை அமைப்பு

0
திண்டுக்கல் - டிச - 04,2021 திண்டுக்கல் மாவட்டத்தில் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரௌடிகள், மற்றும் கொள்ளையர்களை கண்காணிக்கவும் அவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் சிறப்பு தனிப்படைகள் - திண்டுக்கல் மாவட்ட காவல்...

மகளுக்‌‌‌கு பாலியல் தொந்‌‌‌தரவு – தந்தை மீது பாய்ந்தது குண்டாஸ் எஸ்பி அதிரடி...

0
அரியலூர் - டிச -04,2021 காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை: சிறுமியிடம் பாலியல் சீண்டல்கள் செய்த தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அரியலூர் மாவட்டத்தில் தந்தையே தனது மகளை தொடர்ந்து பாலியல் சீண்டல்கள்...

கல்லூரி மாணவனின் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

0
திருவாரூர் - டிச -04,2021 விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிய கல்லூரி மாணவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து காப்பாற்றிய செவிலியரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌவுரவிப்பு மன்னார்குடி நகர...

சிசிடிவி கேமரா கண்காணிப்பு நகரமாக மாறிவரும் சேலம் – போலீஸ் கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு

0
சேலம் - டிச - 04,2021 சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலைய சரகத்தில் உள்ள ரெட்டிப்பட்டி, மாமாங்கம், குரங்குசாவடி, சங்கர் தியேட்டர், ஸ்டேட் பாங்க் காலணி, ஸ்வர்ணபுரி அனெக்ஸ், இந்திரா நகர், நகர்மலை...

காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில்‌‌‌ நடைபெற்றது

0
திருப்பத்தூர் - டிச - 03,2021 மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப காவல் பணியில் தரத்தினை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான இடைவெளியை போக்கவும் பணியின் தரத்தினை அளவிடுவது இன்றியமையாததாகும். திருப்பத்தூர் மாவட்ட காவல்...

தற்போதைய செய்திகள்