கோயம்புத்தூர் – நவ – 12,2021
கடந்த அக்டோபர் மாதம் 30,ஆம்தேதி அன்று சத்தியமங்கலத்தை சேர்ந்த சண்முகம் என்பவர் வடவள்ளியில் உள்ள தனது மகன் வீட்டிற்கு அவரது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது தொண்டாமுத்தூர் ரோடு ஆர்த்தி அசோசியேஷன் கேட் முன்பு மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சண்முகத்தை தாக்கிவிட்டு அவரிடம் இருந்து சுமார் 236 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூபாய். 750000/- யை கொள்ளை அடித்து சென்றதாக சண்முகம் அளித்த புகாரின் பேரில் வடவள்ளி காவல் நிலைய கு.எண்.754/2021 U/s 394 IPC ஆக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழக்கினை விரைந்து கண்டுபிடிக்கும் பொருட்டு மேற்கு மண்டல காவல்துறை தலைவர்
சுதாகர் இ.கா.ப., உத்தரவின்படியும், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.
முத்துசாமி இ.கா.ப., வழிகாட்டுதலின் பேரிலும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., மேற்பார்வையில், பேரூர் உட்கோட்ட காவல் துணைகண்காணிப்பாளர் திருமால் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் வடவள்ளி காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார், உதவி ஆய்வாளர்கள் கருப்புசாமி பாண்டியன், செந்தில்குமார், சதீஷ்குமார் மற்றும் தலைமை காவலர்கள் ரஞ்சித்குமார், ராஜ்குமார்,நவீன் குமார் ஆகியோர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட தனி படையானது கேரளா, கர்நாடகா மற்றும் பல மாவட்டங்களில் தேடி பாஷா@சிக்கந்தர் பாஷா, சம்சுதீன், அன்பரசு என்ற மூவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களை விசாரிக்க கடந்த (30.10.2021)ஆம் தேதி தொண்டாமுத்தூர் ரோடு ஆர்த்தி அசோசியேஷன் கேட் முன்பு ஒரு நபரை வழிமறித்து பணம் மற்றும் நகை கொள்ளையடித்த குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
பின்பு காவல் ஆய்வாளர் மேற்படி குற்றத்தை ஒப்புக்கொண்டவர்களை விசாரணை செய்ததில், இன்று (12.11.2021) பாஷா@சிக்கந்தர் பாஷா விடம் இருந்து 623 தங்கம் கிராம் எடையுள்ள தங்க சங்கிலி, மோதிரம், கைச்செயின், தங்க நாணயம், தாலிக்கொடி மற்றும் 762 கிராம் எடையுள்ள தங்கக் கட்டி ஆகியவற்றையும், சம்சுதீனிடம் இருந்து 190 கிராம் எடையுள்ள தங்க சங்கிலி, மோதிரம், தங்க நாணயம் மற்றும் தோடு ஆகியவற்றையும், அன்பரசிடம் இருந்து 122 கிராம் எடையுள்ள தங்க சங்கிலி மற்றும் ரூபாய் 5 1/2 லட்சம் பணம் ஆகியவற்றை காவல் துறையினர் கைப்பற்றினர்.
மேற்படி இவ்வழக்கில் குற்றம் புரிவதற்கு துணையாக இருந்த பவானி சிங், அப்துல் ஹக்கீம்,அஷ்ரப் அலி, ரஞ்சித் சிங், தினேஷ், பவர் சிங் மற்றும் வெங்கடாசலம் ஆகியோரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த வழக்கில் மேலும் 2 குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேற்படி வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளையும், அவர்கள் கொள்ளையடித்த நகைகளில் 212 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் 5 1/2 லட்சத்தையும், குற்றம் புரிவதற்கு உபயோகப்படுத்திய 3 இருசக்கர வாகனங்களையும் கைப்பற்றி மீட்ட காவல்துறையினரை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் இ.கா.ப., கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர். முத்துசாமி இ.கா.ப., மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., ஆகியோர் வெகுவாக பாராட்டினார்கள்.