74.1 F
Tirunelveli
Monday, November 29, 2021
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் கோவை டிஐஜி ,எஸ்பி அறிவுறுத்தலின்‌படி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பாலியல் குற்‌‌‌றங்‌‌‌களுக்‌‌‌கு எதிரான சட்‌‌‌டங்‌‌‌கள்‌‌‌...

கோவை டிஐஜி ,எஸ்பி அறிவுறுத்தலின்‌படி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பாலியல் குற்‌‌‌றங்‌‌‌களுக்‌‌‌கு எதிரான சட்‌‌‌டங்‌‌‌கள்‌‌‌ குறித்து விழிப்புணர்வு

கோவை – நவ -20,2021

“குழந்தைகள் வார விழாவை முன்னிட்டு”, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது பற்றி கோவை மாவட்ட காவல்துறையினர்பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பெண்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகாசினி தலைமையில் கோவை மாவட்டத்தில் குழந்தைகள் வார விழாவை முன்னிட்டு காவல் ஆய்வாளர்கள் மற்றும் பெண்கள் உதவி மைய காவல் ஆளினர்களால் கடந்த 14.11.2021-ம் தேதி முதல் 20.11.2021 -ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பெண்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்று குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து 102 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இவ்விழாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தடுப்புச் சட்டம் குறித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை குறித்தும் தெரிவிக்க Internal Steering Committee அமைக்க வலியுறுத்தப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் ரீதியாக தொட்டு பேசினாலோ அல்லது பாலியல் ரீதியாக சீண்டல் இருந்தாலோ கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்றும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பெண்கள் பணிபுரியும் இடங்களில் கட்டாயம் புகார் பெட்டி வைத்திருக்க வேண்டும் என்றும், தகவல் பலகையில் பெண் காவல் ஆய்வாளர்களின் தொலைபேசி எண்கள் பார்வையில் படும்படி வைத்திருக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வின் போது வலியுறுத்தப்பட்டது. குழந்தைகள் தங்களது பிரச்சனையை கூற இலவச தொலைபேசி எண் 1098 என்றும் ,பெண்கள் தங்களது பிரச்சனையை கூற இலவச தொலைபேசி எண் 181 என்றும்,அவசர உதவிக்கு 100-யை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு எண் 9498181212, What’s app No.7708100100 என்றும், இணையத்தள வழியாக பாதிக்கப்பட்டால் 155260 என்ற இலவச உதவி எண் என்றும், மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்தால் கோவை மாவட்ட விடியல் உதவி மைய எண்ணையை தொடர்பு கொள்ள வேண்டும் (0422-2300999) என்றும்,தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய காவலன் SOS APP என்றும் இவைகளை குறித்து அவரவர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் துண்டு பிரசுரங்கள் மற்றும் பதாகைகள் வைத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினைகள்,சட்டப் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கு தேவைப்படும் உதவிகள், ஆதரவற்ற நிலையில் காணப்படும் குழந்தைகள் மற்றும் பெண்களின் விபரம் தெரிந்து , அவர்களை மீட்டு தேவைப்படும் படிப்பு மற்றும் மருத்துவ உதவிகளை செய்து காப்பகம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. அப்படி பராமரித்து வருபவர்களின் குடும்ப விபரம் தெரியவரும் பட்சத்தில் அவர்களின் குடும்பத்தினரை அழைத்து பேசி அவர்களை பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் பயன் பெறுவதாக அவர்களது கருத்துரைகளை பகிர்ந்து வருகிறார்கள். மேலும் அச்சமின்றி அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தைரியமாக வெளியே சொல்ல முடிவதாகவும் கூறுகிறார்கள்.

19,724FansLike
54FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையம் “போலீசாருக்கு” பொதுமக்கள் பாராட்டு…

0
திருநெல்வேலி - நவ -28,2021 செய்தியாளர் - இம்ரான் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்‌‌‌ள சாலைகளை மாடுகள் ஆக்கிரமித்து வாகன ஓட்‌‌‌டிகளுக்‌‌‌கு பெரும்‌‌‌ இடையூறாகவும்‌‌‌ அடிக்‌‌‌கடி விபத்து்‌‌‌ ஏற்‌‌‌படுத்‌‌‌துவதாகவும்‌‌‌ பொதுமக்கள் பலமுறை...

மழை வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள குடியிருப்பு பகுதி மக்களை மாவட்ட...

0
தூத்துக்குடி - நவ -28,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்நகர், ரஹ்மத் நகர் மற்றும் முத்தம்மாள் காலனி பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதையடுத்து, அப்பகுதி மக்கள் அத்தியவாசியத்...

போதை பழக்கத்தால்‌‌‌ பாதிக்‌‌‌கபட்‌‌‌டவர்கள்‌‌‌ மீள்‌‌‌வதற்‌‌‌கு மாவட்ட எஸ்பி தலைமையில் ஆலோசனை...

0
அரியலூர் - நவ -28,2021 அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மறு வாழ்விற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்...

கனமழை பெய்துவருவதால் காவல்நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளின்‌‌‌ கட்‌‌‌டிடங்‌‌‌களின்‌‌‌ உறுதிதன்‌‌‌மையை மாவட்ட...

0
திருவாரூர் - நவ -28,2021 திருவாரூர் மாவட்ட காவல்துறைகனமழை காரணமாககாவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளில்பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.ஆயுதப்படை குடியிருப்புகளைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்311-காவலர் குடியிருப்புகள்...

போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் மீட்‌‌‌பு – மாவட்ட எஸ்பி உரியவரிடம் ஒப்படைத்தார்‌

0
தென்காசி - நவ -27,2021 போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில்...

தற்போதைய செய்திகள்