கோயம்புத்தூர் – நவ -15,2021
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இ.கா.ப., இன்று அவர் படித்த கல்லூரியான PARK COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY கல்லூரியில் தனக்கு இருக்கும் வேலைப்பளுவிழும் வருங்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு இவ்வருடம்(2021) முதல் கல்லூரியில் பயில வரும் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு தனது அனுபவங்கள் மற்றும் தனது முயற்சிகளை எடுத்துக்கூறி உரையாற்றினார். மேலும்,மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில், அவர்கள் சிந்திக்கும் வகையிலும் 5″H”என அறிவுரை வழங்கினார். அதாவது 5″H”என்பது,
கடின உழைப்பு :
கல்லூரியில் நாம் எடுக்கும் முயற்சி தான் கடின உழைப்பு என்றும் அந்த கடின உழைப்பு தான் நாம் வாழ்வில் முதல் அடித்தளம் என்றும்,
உடல் ஆரோக்கியம்:
வாழ்வில் நாம் முன்னேற உடல் ஆரோக்கியம் முக்கியம் அதாவது உடல் உறுதி போல் தான் மன உறுதி இருக்கும் என்றும்,எனவே உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும்,
பழக்கவழக்கங்கள்
நல்ல பழக்க வழக்கங்கள்:
” The power of daily Habbit”ஒருநாள் நாம் செய்வது தான் நம் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிக்கும் எனவே நாம் நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும் என்றும்,
பின்பற்றுவதற்கு உதாரணமாக:
“ஒரு மழைத்துளி ஒருவர் கையில் விழுந்தால் அது மற்றவருக்கு குடிதண்ணீர், அதே மழைத்துளி சாக்கடையில் விழுந்தால் அது வீணாகும், அதே மழைத்துளி சாலையில் விழுந்தால் அது வெப்பம் ஆகும் என்றும் .. மழைத்துளி ஒன்றுதான் ஆனால் அது போய் சேரும் இடமே அதனை தீர்மானிக்கும்… என்றும்,
மரியாதை :
நம் செயல்கள் மற்றும் நம் எண்ணங்களே மற்றவர்கள் இடத்தில் நமக்கு கிடைக்கும் மரியாதையின் தீர்மானிக்கும் என்றும்,
மனிதநேயம் :
சகமனிதர்கள் அதாவது நண்பர்கள் நமக்கு தெரிந்தவர்கள் மற்றும் ஸநமக்கு தெரியாதவர்களுக்கு முடிந்தவரை நம்மால் முடிந்த உதவியை மற்றவருக்கு செய்வதுதான் மனிதநேயம் என்றும்,
மாணவர்களுக்கு எளிதாகப் புரியும் வகையிலும், அவர்களை யோசிக்கும் வகையிலும் எடுத்துக்கூறி அறிவுரை வழங்கினார். மேலும் அவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக உறுதிமொழி ஏற்க வைத்தார். மாணவர்கள் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியாவது போதைப்பொருளுக்கு அடிமையாகமாட்டோம் என்றும், எந்தவித சூழ்நிலைகளிலும் சாலை விதிகளை பின்பற்றுவோம் என்றும், சமூக வலைதளங்களில் தங்களின் தனிப்பட்ட விவரங்களை பதிவிட மாட்டோம் என்றும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மாணவ- மாணவிகளுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் தயங்காது அழைத்திடுங்கள் 24 மணி நேரமும் செயல்படும் கோவை மாவட்ட காவல் துறையை (94981-81212, 77081-00100) உங்களுக்காக உதவிட நாங்கள் இருக்கிறோம் என மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தினார்.