திருநெல்வேலி – நவ – 20,2021
திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தூய யோவான் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை வழங்கியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி 20.11.2021 இன்று சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கு தலைமையில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ( பொறுப்பு ) மீராள் பானு மற்றும் சைபர் கிரைம் காவல் துறையினர்
பாளையங்கோட்டை, தூய யோவான் கல்லூரியில் வைத்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சைபர் கிரைம் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கியும், ஸ்டிக்கர்களை கல்லூரியில் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
பின்னர் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கூறுகையில் சைபர் குற்றங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சமூக வலைதளங்களில் உள்ள ஷாப்பிங் நிறுவனங்களின் பெயரில் மோசடி நடைபெறுவது குறித்தும், சமூக வலைத்தளத்தின் முலம் அறிமுகம் இல்லாத நபர்கள் தொடர்பு கொண்டால் அவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருப்பது பற்றியும், சமூக வலைதளம் மூலம் வேலைவாய்ப்பு மோசடி பற்றியும்,
சைபர் கிரைம் காவல்துறையினரின் இலவச எண் 155260 பயன்படுத்துவது பற்றியும், சைபர் கிரைம் காவல்துறையினரின் https://cybercrime.gov.in/ என்ற இணையதளம் பற்றியும்
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.