76.2 F
Tirunelveli
Monday, November 28, 2022
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் கோவையில் - பேரிடர் மீட்‌‌‌பு குழுவை கூடுதல் டிஜிபி நேரில் பார்வையிட்டார்‌

கோவையில் – பேரிடர் மீட்‌‌‌பு குழுவை கூடுதல் டிஜிபி நேரில் பார்வையிட்டார்‌

கோயம்புத்தூர் -நவ -11,2021

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து ஆங்காங்கே கனமழை பெய்து வருவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் போலீசாரை தயார் நிலையில் வைப்பதற்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்‌‌‌ சைலேந்திரபாபு இ.கா.ப., உத்தரவிட்டுள்ளார். இவ்உத்தரவின் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் மழை,வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் கால மீட்பு படையினர் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு, (State Disaster Rescue Force) ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் வன்னியம் பெருமாள் இ.கா.ப., , கோவை மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ள பேரிடர் மீட்பு படையினரையும், அவர்களுக்கு தேவையான உபகரணங்களான காற்றடைத்து வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் (Inflatable lights), வலுவான தூக்குப்படுக்கைகள் (Fortable Stretcher), ஒளிரும் சட்டைகள், பாதுகாப்புச் சட்டை, கடப்பாறை, மண்வெட்டி, கோடாரி, அரிவாள், நைலான் கயிறு, பாதுகாப்பு தலைக்கவசம், மரம் அறுக்கும் இயந்திரம், ஒலி பெருக்கி ஆகியவற்றை பார்வையிட்டு வழங்கினார்.இதில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் இ.கா.ப., கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர்.முத்துசாமி இ.கா.ப., கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ள பேரிடர் மீட்புக் படையினரை 7குழுக்களாக பிரிக்கப்பட்டு தேவையான உபகரணங்களுடன் மழை, வெள்ளம் மற்றும் இயற்கைச் சீற்றங்களில் அதிக பாதிக்க வாய்ப்புள்ள பகுதிக்கு அருகாமையில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. கோவை மாவட்டத்தில் ஆறு மற்றும் ஏரிகளில் வெள்ளம் போய்க்கொண்டு இருக்கிறது. ஆகவே பொதுமக்கள் ஆறு மற்றும் ஏரிகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். பொதுமக்களுக்கு மழை, வெள்ளம் மற்றும் இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படின் புகார்களை தெரிவிக்க 9498181212, 7708100100 மற்றும் 9498101165 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். கோவை மாவட்ட காவல்துறையினர் எந்நேரமும் தங்களுக்கு உதவத் தயார் நிலையில் உள்ளனர் என பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., தெரிவித்துள்ளார்.

19,724FansLike
124FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் நடைபெறும்‌‌‌ இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களில்...

0
திருநெல்வேலி - நவ -27,2022 Newz - webteam தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சரக...

தூத்துக்குடியில் இரண்‌‌‌டாம்‌‌‌ நிலை காவலர் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு கண்காணிப்பு அதிகாரி டிஐஜி...

0
தூத்துக்குடி - நவ -27,202 Newz - webteam தூத்துக்குடியில் 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுதும் மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள...

நெல்லையில் அபகரிக்‌‌‌கபட்ட 90,செண்ட் நிலம் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் வழங்கினார்

0
திருநெல்வேலி - நவ -26,2022 Newz - webteam 90 செண்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த சரோஜா என்பவருக்கு சொந்தமான...

நாளை நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வின் விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி அறிக்கை...

0
தூத்துக்குடி - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட...

நாளை நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வுக்கு போலீசார் செய்யவேண்டிய பணிகள் குறித்து மாவட்ட...

0
திண்டுக்கல் - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெற உள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வுக்கு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து திண்டுக்கல்...

தற்போதைய செய்திகள்