கோயம்புத்தூர் – நவ -12,2021
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு தமிழக அரசால் கோவை சரகத்திற்கு, சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்பு பிரிவு கூடுதல் இயக்குனர் வன்னியபெருமாள்,இ.கா.ப., தலைமையில் கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர்,இ.கா.ப., கோவை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி டாக்டர் தரேஷ் அகமது,இ.ஆ.ப.,கோவை மாவட்ட ஆட்சி தலைவர் சமீரன்,இ.ஆ.ப., கோவை மாநகர காவல் துணை ஆணையர் போக்குவரத்து எஸ்.ஆர். செந்தில்குமார், மாநகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அலுவலர்களுடன், கனமழை பெய்யும் பட்சத்தில் பாதிப்புகள் உண்டாகும் பகுதிகளான வாலாங்குளம், பெரியகுளம், செல்வபுரம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் செல்வபுரம் பகுதியில் செயல்படுத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்ற பகுதியில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் துணை ஆணையர் தலைமையிடம், கோவை, நீலகிரி, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, மழை வெள்ள பாதிப்புகளின் போது காவல்துறையினர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், மற்ற துறை யினர்களுடன் இணைந்து எடுக்க வேண்டிய
நடவடிக்கைகள் குறித்தும் அறிவுரை வழங்கினார்.