தூத்துக்குடி – நவ -17,2021
வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சரக்கு வாகனத்தில் கஞ்சா கடத்திய எதிரி கைது – ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான 25 கிலோ கஞ்சா மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் – இந்த ஆண்டு இதுவரை கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்த வழக்கில் ஈடுபட்ட 17 பேர் உட்பட 172 பேர் குண்டர் சட்டத்தில் கைது – எதிரியை கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு எதிரிகள் கைது செய்யப்பட்டு போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) முருகன் தலைமையில் தலைமை காவலர் பென்சிங், முதல் நிலைக காவலர்கள் மாணிக்கராஜ், சாமுவேல் ராஜ், மகாலிங்கம், காவலர்கள் திருமணிராஜன், செந்தில்குமார் மற்றும் திரு. முத்துபாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த TN 05 BW 4003 என்ற எண் கொண்ட சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அந்த வாகனத்தில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி தனிப்படையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்த வாகனத்தை ஓட்டி வந்தது மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியை சேர்ந்த பால்பாண்டி மகன் அலெக்ஸ்பாண்டி (29) என்பதும், அவர் மேற்படி சரக்கு வாகனத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது. உடனே தனிப்படையினர் மேற்படி எதிரி அலெக்ஸ்பாண்டியை கைது செய்து, அவரிடமிருந்த ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான 25 கிலோ கஞ்சாவையும், கடத்துவதற்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கஞ்சா கடத்திய எதிரியை கைது செய்து, கஞ்சா மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் 309 வழக்குகள் பதிவு செய்து 369 பேர் கைது செய்யப்பட்டு 316 கிலோ கஞ்சா பறிமுதல்; செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் சம்மந்தப்பட்ட 17 பேர் உட்பட மொத்தம் 172 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவத்துள்ளார். மேலும் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தில் விற்பனையில் ஈடுபடுவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.