திருநெல்வேலி – நவ-01,2021
ரூபாய் 3 கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் 29.94 சென்ட் நிலம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு. நில அபகரிப்பு பிரிவு காவல் துறையினருக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு.
தென்காசி மாவட்டம், வைரம்ஸ் நகரைச் சேர்ந்த முருகன், என்பவருக்கு கிருஷ்ணாபுரம் அருகேயுள்ள பற்பகுளத்தில் ரூபாய் 3 கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் 29.94 செண்ட் இடம் உள்ளது. இவர் தொழில் காரணமாக மும்பையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பற்பகுளத்தில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தினை விற்பனை செய்வதற்காக வந்தபோது அந்நிலம் போலி ஆவணம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பின்னர் முருகன் அவர்கள் தனது நிலத்தினை மீட்டுத்தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்,இ.கா.ப., மனு அளித்தார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்ணபாஸ் அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் நில அபகரிப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் சாந்தி அவர்கள், உதவி ஆய்வாளர் தனலெட்சுமி. தலைமையிலான தலைமைக் காவலர் நாகராஜன் மற்றும் முதல்நிலைக் காவலர் சண்முகம் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு ரூபாய் 3 கோடி மதிப்பிலான நிலத்தினை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன், இ.கா.ப., நில உரிமையாளரான முருகனுக்கு இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூபாய் 3 கோடி மதிப்புள்ள நிலத்தினை மீட்டு நிலத்தினை உரிமையாளரிடம் ஒப்படைத்த திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பர்ணபாஸ் மற்றும் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன், இ.கா.ப., வெகுவாகப் பாராட்டினார்.