சென்னை – நவ -18,2021
சென்னை, நவ. 19–
தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசு நேற்று திடீர் உத்தரவிட்டுள்ளது. நெல்லை புதிய எஸ்பியாக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்:
- தீபக் தாமோர் (கோவை போலீஸ் கமிஷனர்) -– லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸ் இணை இயக்குநர், சென்னை.
- சென்னை நகர போக்குவரத்து கூடுதல் கமிஷனராக இருந்த பிரதீப்குமார் கோவை நகர புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை நகர எஸ்டாபிளிஷ்மென்ட் டிஐஜியாக இருந்த பிரபாகரன் சென்னை கிழக்கு மண்டல இணைக்கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- கிழக்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேந்திரன் சென்னை நகர போக்குவரத்துப் போலீஸ் (தெற்கு) இணைக்கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை நகர போக்குவரத்துப் போலீஸ் இணைக்கமிஷனர் செந்தில்குமாரி, எஸ்டாபிளிஷ்மென்ட் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருச்சி எஸ்பி மூர்த்தி சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- போதைப்பொருள் தடுப்புப்பிரிவு எஸ்பி சுஜித்குமார் திருச்சி எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
- சென்னை புளியந்தோப்பு துணைக்கமிஷனர் ராஜேஷ்கண்ணன், வேலூர் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
- நெல்லை எஸ்பி மணிவண்ணன் புளியந்தோப்பு துணைக்கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளார்.
- டிஜிபி அலுவலக நிர்வாகப்பிரிவு எஸ்பி சரவணன், நெல்லை புதிய எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். 11. வேலூர் எஸ்பி செல்வகுமார் நிர்வாகப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
- அயல்பணி சென்று காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரம்யாபாரதி சென்னை சைபர் கிரைம் எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.