80.5 F
Tirunelveli
Monday, November 29, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி கொலை நடந்த 4,மணிநேரத்தில் குற்றவாளி கைது தனிப்படை போலீசாருக்கு மாவட்ட எஸ்‌.பி பாராட்டு

கொலை நடந்த 4,மணிநேரத்தில் குற்றவாளி கைது தனிப்படை போலீசாருக்கு மாவட்ட எஸ்‌.பி பாராட்டு

தூத்துக்குடி – அக் – 20,2021

எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை – சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று விசாரணை – சம்பவம் நடந்த 4 மணி நேரத்தில் எதிரி கைது – உடனே கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.

எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரகிரி புதூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்புராஜ் மகன் சூரிய ராகவன் (31) என்பவர் எட்டையாபுரம் நடுவிற்பட்டி பகுதியில் அவரது உறவினரின் எல்க்ட்ரிக்கல் கடையில் டி.வி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவரை மேற்படி டி.வி மெக்கானிக் கடையில் வைத்து இன்று மர்ம நபர் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூரிய ராகவன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் எட்டையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர்முகம்மது தலைமையில் உதவி ஆய்வாளர் பொன்ராஜ், முதல் நிலை காவலர் . பாண்டியராஜ் மற்றும் காவலர் முனீஸ்வரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட எதிரியை கண்டுபிடித்து உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.

மேற்படி உத்தரவின்படி தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில் படர்ந்தபுளி பகுதியை சேர்ந்த 21வயது பெண் ஒருவரை கொலையுண்ட சூரிய ராகவன் (31) கடந்த 2 மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்திற்கு முன்பு சோழபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் ஆனந்தராஜ் (22) என்பவர் சூரிய ராகவனின் மனைவியான மேற்படி பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார். தான் ஒருதலையாக காதலித்த பெண்ணை சூரிய ராகவன் திருமண செய்து கொண்டதால், அவர் மீது ஆத்திமடைந்த மேற்படி ஆனந்தராஜ், அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து இன்று நடுவிற்பட்டி பகுதியில் உள்ள சூரிய ராகவன் வேலை செய்யும் கடைக்கு சென்று அவரிடம் தகராறு செய்து, அவரை கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. உடனே மேற்படி தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி மேற்படி எதிரி ஆனந்தராஜை கைது செய்து, அவரிடமிருந்த 2 கத்திகளை பறிமுதல் செய்தனர்.

சம்பவம் நடந்த 4 மணிநேரத்தில் துரிதமாக செயல்பட்டு எதிரியை உடனே கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

19,724FansLike
54FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையம் “போலீசாருக்கு” பொதுமக்கள் பாராட்டு…

0
திருநெல்வேலி - நவ -28,2021 செய்தியாளர் - இம்ரான் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்‌‌‌ள சாலைகளை மாடுகள் ஆக்கிரமித்து வாகன ஓட்‌‌‌டிகளுக்‌‌‌கு பெரும்‌‌‌ இடையூறாகவும்‌‌‌ அடிக்‌‌‌கடி விபத்து்‌‌‌ ஏற்‌‌‌படுத்‌‌‌துவதாகவும்‌‌‌ பொதுமக்கள் பலமுறை...

மழை வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள குடியிருப்பு பகுதி மக்களை மாவட்ட...

0
தூத்துக்குடி - நவ -28,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்நகர், ரஹ்மத் நகர் மற்றும் முத்தம்மாள் காலனி பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதையடுத்து, அப்பகுதி மக்கள் அத்தியவாசியத்...

போதை பழக்கத்தால்‌‌‌ பாதிக்‌‌‌கபட்‌‌‌டவர்கள்‌‌‌ மீள்‌‌‌வதற்‌‌‌கு மாவட்ட எஸ்பி தலைமையில் ஆலோசனை...

0
அரியலூர் - நவ -28,2021 அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மறு வாழ்விற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்...

கனமழை பெய்துவருவதால் காவல்நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளின்‌‌‌ கட்‌‌‌டிடங்‌‌‌களின்‌‌‌ உறுதிதன்‌‌‌மையை மாவட்ட...

0
திருவாரூர் - நவ -28,2021 திருவாரூர் மாவட்ட காவல்துறைகனமழை காரணமாககாவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்புகளில்பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.ஆயுதப்படை குடியிருப்புகளைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்311-காவலர் குடியிருப்புகள்...

போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் மீட்‌‌‌பு – மாவட்ட எஸ்பி உரியவரிடம் ஒப்படைத்தார்‌

0
தென்காசி - நவ -27,2021 போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்பு தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில்...

தற்போதைய செய்திகள்