தூத்துக்குடி – அக் – 15,2021
தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் அக்டோபர் 16ம் தேதி நடைபெறவுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 222 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழுவதும் தளர்வுகளுடன் கூடிய 144 தடைஉத்தரவு 31.10.2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு அமலில் உள்ளதால் வரும் அக்டோபர் 16ம் தேதி நடைபெறவுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 222ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடமான கயத்தாறு மற்றும் ஓட்டப்பிடாரம் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை ஆகியவற்றில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி கிடையாது.
இந்த பாதுகாப்பு பணியில் காவல்துணை கண்காணிப்பாளர்கள் கோவில்பட்டி உதயசூரியன், மணியாச்சி சங்கர் மற்றும் விளாத்திக்குளம் . பிரகாஷ் மேற்பார்வையில் 20 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 300 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேற்படி பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கயத்தாறு பகுதியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின்போது கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன், கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து, உதவி ஆய்வாளர் அந்தோணி திலிப் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.