82.3 F
Tirunelveli
Monday, November 28, 2022
முகப்பு மாவட்டம் தேனி தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய தலைவர்களிடம்...

தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய தலைவர்களிடம் டி.எஸ்.பி வலியுறுத்தல்

தேனி – அக் – 24,2021

செய்தியாளர் – செல்வகுமார்

டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழா சம்பந்தமாக சமுதாயத் தலைவர்களிடம் தீர்மானங்கள் பற்றி நடந்துகொள்ள ஆலோசனை கூட்டம் நடந்தது

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா உட்பட்ட அனைத்து தேவர் சமுதாய தலைவர்களையும் அலைத்து அவர்களுடன் பெரியகுளம் துணைக் கண்காணிப்பாளர் முத்துக்குமார் ஆலோசனை மேற்கொண்டார்… தமிழ்நாட்டின் தற்போதைய பொருளாதார நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் பட்சத்தில் 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாள் 30 10 2019 தேதி என்ற ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை நிகழ்ச்சி பிற மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரோ பிரவீன் உமேஷ் அறிவுறுத்தலின்படி கூட்டம் நடைபெற்றது.. நடக்க இருக்கும் தேவர் குருபூஜையை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் 24 10 2011 மாலை 7 மணி அளவில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதன்படி நடந்துகொள்ள இதில் ஒப்பும் செய்யப்பட்டது.. குருபூஜை விழாவிற்கு செல்வதற்கு சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் தடை உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக பொதுமக்கள் மேற்படி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மேலும் பதிவு பெற்ற அரசியல் கட்சி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமே இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரின்‌‌‌ முன் அனுமதி பெற 18 10 2021 முதல் 24 10 2011 வரை ramanathapuram. nic. Inn என்ற இணையதளத்தில் முன் அனுமதி மற்றும் வாகன அனுமதி பெற்று 5 நபர்களுக்கு மிகாமல் மற்றும் மூன்று வாகனங்களுக்கு மிகாமல் செல்ல அனுமதிக்கப்படுகிறது அவ்வாறு செல்லும் போது சொந்த வாகனங்களில் மட்டுமே வர வேண்டும், வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.. காளையார்கோவில் மற்றும் பசும்பொன் குருபூஜை மற்றும் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு ஃபிளக்ஸ் போர்டுகள் பேனர்கள் மைக்செட் போன்ற மேளதாளங்கள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, அரசு மற்றும் பொது ஸ்தாபன சம்பந்தப்பட்ட சுவர்களில் எழுதுவது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது,ஏற்கனவே இது சம்பந்தமாக சுவர்களில் இந்தியர்கள் எழுதப்பட்டிருந்தால் உடனடியாக அளிக்கப்பட வேண்டும், பிறர் மனதை புண்படுத்த வசனங்கள் மற்றும் கோஷங்களை எழுப்பக்கூடாது, முன் அனுமதி பெற்ற அரசியல் தலைவர்கள் காவல்துறையினர் அனுமதி வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்,வாகனத்தில் பேனர்கள் கட்டக்கூடாது, வாகனத்தில் செல்பவர்கள் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி கொண்டு செல்லக்கூடாது, வாகனங்கள் செல்லும் சாலையில் பாதுகாப்பில் உள்ள காவல்துறையினர் அறிவுரைகளை ஏற்று நடத்த வேண்டும் காவல் சோதனைச் சாவடியில் வாகனங்களை நிறுத்தும் சோதனை செய்தால் வாகனங்கள் நிறுத்தி சோதனை ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், ஒவ்வொரு வானத்திற்கும் ஒரு அமைப்பாளர் பெயர் அவரது செல்போன் நம்பர் மற்றும் வாகன ஓட்டியின் செல்போன் நம்பர் ஆகியவற்றை காவல்துறைனற்கு கொடுக்க வேண்டும், ஒவ்வொரு குழுக்களும் வாகனங்களில் செல்லும் நபர்களின் விவரங்களும் மற்றும் விழா முடிந்து திரும்பும் நேரம் பற்றி காவல்துறையினர் தெரிவிக்க வேண்டும், ஒவ்வொரு வாகனமும் சென்று திரும்பும் வரை ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதனை அமைப்பாளர் பொறுப்பாவார் , உள்ளூரில் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் சம்பந்தமாக நிர்வாகிகள் முன்கூட்டியே காவல்துறையினர் தெரிவித்து அனுமதி பெற வேண்டும், உள்ளூர் நிகழ்ச்சிகள் மற்றும் சமுதாயத்தினரின் எவ்வகையிலும் தொந்தரவு இல்லாத வகையில் செயல்படுத்திக் கொள்ள வேண்டும்…. என்றும் காவல்துறையினர் கட்டுப்பாடை மீறி யாரும் செயல்பட வேண்டாம் என்று டிஎஸ்பி முத்துக்குமார் தேவர் சமுதாயத் தலைவர்களிடம் கேட்டுக் கொண்டார்…உடன் பெரியகுளம் தென்கரை ஆய்வாளர் சுகுமாரன்,மற்றும் ஜெயச்சந்திரன் தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் பாண்டியராஜன் அம்மாவாசை ஆகிய சக காவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்‌‌‌

19,724FansLike
124FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் நடைபெறும்‌‌‌ இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களில்...

0
திருநெல்வேலி - நவ -27,2022 Newz - webteam தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சரக...

தூத்துக்குடியில் இரண்‌‌‌டாம்‌‌‌ நிலை காவலர் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு கண்காணிப்பு அதிகாரி டிஐஜி...

0
தூத்துக்குடி - நவ -27,202 Newz - webteam தூத்துக்குடியில் 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுதும் மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள...

நெல்லையில் அபகரிக்‌‌‌கபட்ட 90,செண்ட் நிலம் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் வழங்கினார்

0
திருநெல்வேலி - நவ -26,2022 Newz - webteam 90 செண்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த சரோஜா என்பவருக்கு சொந்தமான...

நாளை நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வின் விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி அறிக்கை...

0
தூத்துக்குடி - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட...

நாளை நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வுக்கு போலீசார் செய்யவேண்டிய பணிகள் குறித்து மாவட்ட...

0
திண்டுக்கல் - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெற உள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வுக்கு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து திண்டுக்கல்...

தற்போதைய செய்திகள்