தூத்துக்குடி – அக் -11,2021
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 29 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துப்பாஸ்பட்டி கண்மாய் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொண்டிருந்த எதிரிகள் மூவரையும் கைது செய்து வழக்கின் எதிரிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய தலைமை காவலர் பென்சிங், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் மாணிக்கராஜ், மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் சாமுவேல், தாளமுத்துநகர் காவல் நிலைய முதல் நிலை காவலர் சுந்தர்சிங், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய காவலர்கள் செந்தில். . திருமணிராஜன் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் முத்துப்பாண்டி ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
கடந்த 06.10.2021 அன்று புதியம்புத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்தின்பேரில் ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 1½ டன் இரும்பு கம்பிகளை புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடிவைதானேந்தல் பகுதியில் இருந்து திருடியதை கண்டுபிடித்து 5 எதிரிகளை கைது செய்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மேற்படி ரூபாய். 1½ லட்சம் மதிப்புள்ள இரும்பு கம்பிகளை பறிமுதல் செய்ய உதவியாக இருந்தும்,
அதேபோன்று புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற எதிரியை கண்டுபிடித்து கைது செய்து, விபத்திற்கு காரணமாக இருந்த அவரது இருசக்கர வாகனத்தையும் கைப்பற்றிய புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலன், முதல் நிலை காவலர் சிவபெருமாள் மற்றும் ராஜ நாராயணமூர்த்தி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கடந்த 04.10.2021 அன்று ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேம்பலாபாத் பேரூந்து நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு 3 எதிரிகளை கைது செய்து அவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சா மற்றும் ரூபாய். 40,000/- பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த ஆழ்வார்திருநகரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் இன்னோஸ்குமார், முதல் நிலை காவலர்கள் . மாணிக்கராஜ், இசக்கிமுத்து மற்றும் சாந்தகுட்டி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரியை கைது செய்து, அவரிடமிருந்து சுமார் ரூபாய். 90,000/- மதிப்பிலான 3 சவரன் நகைகளை மீட்டு எதிரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன், உதவி ஆய்வாளர் முத்துராஜா, மணியாச்சி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பொன் முனியசாமி, நாரைக்கிணறு காவல் நிலைய முதல் நிலை காவலர் கொடிவேல், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் பிரபாகரன் மற்றும் கடம்பூர் காவல் நிலைய காவலர் விடுதலை பாரதிக்கண்ணன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015ம் வருடம் நடைபெற்ற மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூபாய். 1000/- அபராதம் பெற்று கொடுத்த விளாத்திகுளம் காவல் நிலைய முதல் நிலை காவலர் . ராமர், காவலர் . கோட்டிமுத்து மற்றும் மகிளா நீதிமன்ற அரசு குற்றவியல் வழக்கறிஞர் திருமதி. சுபாஷினி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2004ம் வருடம் கஞ்சா கடத்தல் வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரி கடந்த 12 வருடங்களாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியில் வைத்து கைது செய்து சிறையிலடைத்த மாசார்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிமாறன், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் . பால்ராஜ், விளாத்திகுளம் காவல் நிலைய முதல் நிலை காவலர் மகேந்திரன் மற்றும் காடல்குடி காவல் நிலைய முதல் நிலை காவலர் முத்துகாமாட்சி ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
காவல் ஆய்வாளர் உட்பட 29 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் . எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உடனிருந்தார்.