85.9 F
Tirunelveli
Tuesday, May 24, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்‌‌‌துகுடியில்‌‌‌ - 3,லட்‌‌‌சத்‌‌‌திற்‌‌‌கு தாயே குழந்தை விற்‌‌‌ற கொடூரம்‌‌‌ குழந்‌‌‌தையை மீட்‌‌‌ட எஸ்‌‌‌.பி 3,பேர்‌‌‌ கைது

தூத்‌‌‌துகுடியில்‌‌‌ – 3,லட்‌‌‌சத்‌‌‌திற்‌‌‌கு தாயே குழந்தை விற்‌‌‌ற கொடூரம்‌‌‌ குழந்‌‌‌தையை மீட்‌‌‌ட எஸ்‌‌‌.பி 3,பேர்‌‌‌ கைது

தூத்துக்குடி – அக் 01, 2021

சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 3லட்சத்திற்கு விற்பனை செய்த 9 மாத ஆண் குழந்தை மீட்பு – குழந்தையை விலைக்கு வாங்கிய 3 பேர் கைது – கைது செய்த தனிப்படைப் போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (38) என்பவருக்கும், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைகுட்பட்ட கொத்தனார் காலனி பகுதியை ஜெபமலர் (28) என்பவருக்கும் கடந்த 2019 ஆண்டு திருமணம் ஆகியுள்ளது. தற்போது இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இந்நிலையில மேற்படி ஜெபமலருக்கு அடுத்து திருமணம் செய்ய அவரது குடும்பத்தார் முடிவெடுத்துள்ளனர். அதனால் திருமணத்திற்கு தடை ஏற்படும் என்பதால் ஜெபமலரின் 9 மாத ஆண் குழந்தை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 23.09.2021 அன்று ஜெபமலர் தனது சகோதரர் அந்தோணி, ஜெபமலர் தாயார் கிருபா, தந்தை செல்வராஜ், மாமா டேனியல் ஆகியோர் புரோக்கர்கர்களான ஜேசுதாஸ், கார்த்திகேயன் ஆகியோரை தொடர்பு கொண்டு கணவர் மணிகண்டனுக்கு தெரியாமல், தனது 9 மாத ஆண் குழந்தையை ரூபாய் 3 லட்சத்திற்காக 24.09.2021 அன்று விற்பனை செய்துள்ளனர். இதனையறிந்த மணிகண்டன் கடந்த 28.09.2021 அன்று தனது குழந்தையை மீட்டு தருமாறு அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ், இ.கா.ப மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையில் உதவி ஆய்வாளர் சங்கர், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நம்பிராஜன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து குழந்தையை மீட்டு, சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு ஜெபமலரிடம் குழந்தையை பணம் கொடுத்து விலைக்கு வாங்கிய கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மேலசூரங்குடி பகுதியை சேர்ந்த ஹரிசந்திரன் மகன் செல்வமணி (52) அவரது மனைவி ஸ்ரீதேவி (40) மற்றும் அதற்கு உதவியாக இருந்த ராஜபாளையம் ரெட்டியார்பட்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் கார்த்திகேயன் (30) ஆகிய 3 பேரையும் கைது செய்து 9 மாத ஆண் குழந்தையை மீட்டனர். மேலும் குழந்தையை விற்பனை செய்த எதிரிகளான ஜெபமலர், அந்தோணி, கிருபா, செல்வராஜ், டேனியல், புரோக்கர் ஜேசுதாஸ் மற்றும் இதில் சம்மந்தப்பட்ட எதிரிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகினற்னர்.

9 மாத ஆண் குழந்தையை விலைக்கு வாங்கிய தம்பதியினரை கைது செய்து குழந்தையை மீட்ட மேற்படி தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

19,724FansLike
84FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மார்கெட்டில் முன்விரோத கொலையில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

0
நெல்லை மாநகரம் - மே-23,2022 நெல்லை மாநகரம் தச்சநல்லூர் மார்க்கெட்டில் முன்விரோதம் காரணமாக கொலையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுப்பையாபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த...

“குவாரியில் சிக்கியிருந்த 4,நபர்களின்‌‌‌ உடல்கள் 8,நாட்களுக்கு பிறகு காவல்துறை, தீயனைப்புதுறை மற்‌‌‌றும்‌‌‌...

0
திருநெல்வேலி - மே -23,2022 திருநெல்வேலி குவாரி விபத்தில் சிக்கியிருந்த 6 நபர்களில் 2 நபர்களை உயிருடனும் 4 நபர்களின் உடலை 8 நாட்கள் தொடர் மீட்புபணிக்கு பின் மீட்ட காவல்துறையினர், தீயணைப்பு துறையினர்...

மூத்தோர் தடகள போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு எஸ்பி பாராட்டு

0
விழுப்புரம் - மே- 23,2022 அகில இந்திய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற விழுப்புரம் மாவட்ட விளையாட்டு வீரர்கள் காவல் கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். கடந்த 20,21,22 ஆகிய...

இறகுபந்து போட்டியில்‌‌‌ தங்க பதக்கம் வென்ற காவல் ஆய்வாளருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு!!!!

0
மதுரை - மே-23,2022 திருவனந்தபுரத்தில் நடந்து வரும் 4வது தேசிய மூத்தோர் விளையாட்டு போட்டி 18.05.2022 துவங்கி 22.05.2022 அன்று நிறைவு பெற்றது. இதில் வயது வாரியான போட்டிகளில் அனைத்து மாநிலங்களிலும் பங்கேற்றனர். இப்போட்டியில்...

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில்‌‌‌ உயிழந்தவர்களின் நினைவு நாளை முன்னிட்டு 2500 போலீசார்‌‌‌...

0
தூத்துக்குடி - மே -20,2022 தூத்துக்குடி தனியார் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி...

தற்போதைய செய்திகள்