தூத்துக்குடி – அக் – 10,2021
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மருந்துகளை இலவசமாக பல்வேறு மருத்துவ முகாம்கள் மூலம் அதிக அளவில் வழங்கியதற்காக உலக சாதனை என்ற இந்திய அமைப்பின் (World Records India) பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த முதல் நிலை காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் இன்று பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை சேர்ந்த முதல் நிலை காவலர் ராஜலிங்கம் என்பவர் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் மருந்துகளை மதுரை மது இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் பெற்று பல்வேறு மருத்துவ முகாம்கள் மூலம் அதிக அளவில் இலவசமாக வழங்கி சேவை செய்துள்ளார். இச்சேவையை பாராட்டி ‘வேர்ல்டு ரெக்கார்டுஸ் இந்தியா” (World Records India) சார்பில் கடந்த 03.09.2021 அன்று சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கியுள்ளது.
பொதுமக்களுக்கு சேவை செய்து சான்றிதழ் மற்றும் பதக்கம் பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த முதல்நிலைக் காவலர் ராஜலிங்கம் என்பவர் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் மாவட்ட காவல்துறை அலுலவலத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சான்றிதழ் பெற்ற முதல் நிலை காவலரின் சேவையை பாராட்டி வாழ்த்தினார்.