77.8 F
Tirunelveli
Monday, November 28, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி "ரவுடிகள் கைதில்‌‌‌ தமிழகத்‌‌‌தில்‌‌‌ முதலிடம் பிடித்த தூத்துக்குடி"

“ரவுடிகள் கைதில்‌‌‌ தமிழகத்‌‌‌தில்‌‌‌ முதலிடம் பிடித்த தூத்துக்குடி”

தூத்துக்குடி – அக் – 28,2021

தூத்துக்குடியில் சமீபத்தில் ரவுடி துரைமுருகன் என்கவுன்டர் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. அந்த பரபரப்பு
அடங்குவதற்குள் திருச்செந்தூரில் பாதுகாப்‌‌‌பு பணியில்‌ இருந்த காவலரை அமைச்சரின் உதவியாளர் தாக்கிய சம்பவம்
அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த காவலருக்கு மாவட்ட காவல்துறை சார்பாக எந்த உதவியும்
அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி முன்னாள் முதல்வர் மற்றும் சமூக
ஊடங்களில் பேட்டியளித்து மேலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற சர்ச்சைக்குரிய சம்பவங்கள்
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் நடந்து வந்த நிலையில் உண்மை நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ள
போலீஸ் மீடியா சார்பில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமாரிடம்‌ நேர்காணல் நடத்தினோம். அதற்கு எஸ்பி அளித்த பதில்கள்
இங்கே…..

  • தூத்துக்குடியில் எஸ்பியாக பதவி ஏற்று ஓராண்டுக்கும் மேல் ஆகி விட்டது. இதுவரை தாங்கள் பயணித்த கள
    அனுபவம் பற்றி கூறுங்களேன்?

– தூத்துக்குடி மாவட்டம் 8 சப் டிவிஷன்களையும்‌‌‌, 54 காவல் ‌‌‌நிலையங்‌‌‌களையும்‌‌‌ உள்‌‌‌ளடக்‌‌‌கிய பெரிய காவல்
மாவட்டம். மொத்தத்தில் மிகவும் சென்சிட்டிவ்வான ஏரியா தூத்துக்குடி. சிறிய விஷயத்தில் கூட அலட்சியம் செய்தால்
போச்சு. அது பூதாகாரமாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதை நான் காண்கிறேன். டிஎஸ்பி மற்றும்
இன்ஸ்பெக்டர்களுக்கு எனது முதல் அறிவுரை என்னவென்றால் புகார் அளிக்க வருபவர்களுக்கு அவர் அளிக்கும்
புகாருக்கு முதலில் புகார் மனு ஏற்பு ரசீது என்னும் சிஎஸ்ஆர் காப்பி வழங்க வேண்டும் என்பதுதான். புகாரில் உண்மை
தன்மையை பொறுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதனை முறையாக இன்ஸ்பெக்டர்கள் செய்கிறார்களா
என்பதை டிஎஸ்பிகள்‌‌‌ கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளேன். இது போன்ற முறையான விசாரணை
மேற்கொண்டு உடனுக்குடன் பிரச்சனைகளுக்கு முடிவு செய்வதால் காவல்துறை மீது பொதுமக்களுக்கு ஒரு நன்மதிப்பு
ஏற்டுகிறது. அது இந்த ஓராண்டு காலத்தில் ஏற்பட்டுள்ளது.

  • சாத்தான்குளம் ஜெயராஜ்,‌‌‌ பெனிக்‌‌‌ஸ்‌‌‌ இறப்புக்குப் பிறகு காவல்துறைக்கும் வியாபாரிகளுக்கும் உள்ள உறவு
    சுமுகமாக உள்ளதா?

அதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து தாலுகாவிலும் எனது தலைமையிலும் அந்தப் பகுதியின்
டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் முன்னிலையிலும் வியாபாரிகள் மற்றும் காவல்துறை நல்லுறவு ஆலோசனை கூட்டத்தை
நடத்தியிருக்கிறோம். அதில் தெளிவாக அரசின் விதிமுறைகள் செயல்பாடுகளையும்‌‌‌ எவ்வாறு வணிகர்கள் கடைபிடிக்க
வேண்டும் அறிவுரைகளையும் அவர்கள் கடைபிடிக்க தேவையான உதவிகளை காவல்துறை எல்லா நேரங்களிலும்
செய்வதற்கு தயாராக இருக்கிறோம் என்பதனையும் அவரிடத்தில் வலியுறுத்தினோம். முக்கியமாக கொரானா இரண்டாம்
அலை சம்பந்தமாக அரசு விதித்திருந்த கட்டுப்பாட்டு விதிமுறைகள் முழுமையாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த
வியாபாரிகளும் பொதுமக்களும் கடைபிடித்து முழு ஒத்துழைப்பு தந்தார்கள். இரண்டாம் கட்ட லாக்‌‌‌டவுனில்‌‌‌ எந்த
பகுதிகளிலும்‌‌‌ வியாபாரிகளுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ காவல்துறைக்குமோ இடையில் எந்த மோதலும் கருத்து
வேறுபாடும் இல்லை. மேலும் நான் ஆலோசனை கூட்டத்திற்கு செல்லும் பொழுதெல்லாம் வியாபாரி சங்க
பொறுப்பாளர்களிடத்‌‌‌தில்‌‌‌ ஒரு கோரிக்கையை முன் வைப்பேன் வணிகபகுதிகளில்‌‌‌ மக்கள் கூட கூடிய இடங்களில்
நீங்கள் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன். அதற்கு அவர்கள்
முழுமனதோடு அந்த கோரிக்கையை ஏற்று இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சிறிய பெரிய கடை வீதிகள்
முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு காவல்துறையின் உத்தரவுகளை மற்‌‌‌றும்‌‌‌
கோரிக்கைகளை வியாபாரிகள் முழுவதுமாக கடைபிடிக்கிறார்கள். தற்போது காவல்துறைக்கும் வியாபாரிகளுக்கும்
மிகுந்த நல்லுறவு உள்ளது.

  • தூத்துக்குடி மாவட்டத்தில் கிரைம் ரேட்டிங் குறைந்துள்ளதா?

தற்போது சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாகவும்‌‌ மிக அமைதியாகவும்‌‌‌ உள்ளது. நான் கடந்த ஆண்டு ஜூன் மாதம்
தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பொறுப்‌‌‌பேற்‌‌‌றேன்‌‌‌ அன்‌‌‌றிலிருந்‌‌‌து இன்று அக்டோபர் மாதம் வரை உச்‌‌‌சபட்‌‌‌ச குற்றப்
பின்னணியில் உள்‌‌‌ள ‌‌சுமார் 290 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால்
குற்றங்கள் குறைந்துள்ளன. மேலும் பதற்றம் நிறைந்த பகுதிகளில் அந்த பகுதி ஆய்வாளர்கள் மற்றும் டிஎஸ்பிக்கள்
ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்தந்த பகுதியிலுள்ள தனிப்பிரிவு
காவலர்கள் குற்றங்கள் நடப்பதற்கு முன்பே விழிப்புடன் செயல்பட்டு உடனுக்குடன் தகவல் தருகிறார்கள்.
அதனடிப்படையில் பதட்டமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இருசக்கர வாகன
ரோந்து பணிகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களை கண்காணிப்பதற்காக ஏடிஎஸ்பி தலைமையில் குழு
அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மணல் கடத்தல் , போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கஞ்சா குட்கா
தடைசெய்யப்பட்ட லாட்டரி இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள்
ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சட்டம், ஒழுங்கு மட்டுமல்ல சமூக விரோத குற்ற செயல்களில்
நடைபெறாமல் தடுக்க தொடர் நடவடிக்‌‌‌ககை எடுக்கப்பட்டு வருகிறது.
சட்டம் ஒழுங்கு காவல் பணியில் காவலர்களின் ஒத்துழைப்பு எப்படி உள்ளது?

நான் போடும் உத்தரவுகளை காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவல் நிலைய பணியில் இருக்கக்கூடியவர்கள் உடனடியாக அதன் அவசியம் கருதி செய்து முடித்து விடுகிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களது சிறந்த காவல் பணியை பாராட்டி சான்றிதழ் அளித்து பாராட்டப்படுகின்றனர். நற்சான்றிதழ்களை நானே என் அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து வழங்குகிறேன். இதுவரை 1,500 காவல்‌‌‌துறையினருக்‌‌‌கு பாராட்டு பெற்றுள்ளனர். இது அவர்களை உற்சாகமாக பணி செய்ய வைக்கிறது. பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் இருக்கும் காவலர்களின் குறைகளையும் சரி செய்கிறேன்.

  • பொதுமக்களுக்கும் உங்களுக்குமான இடைவெளி குறைவானதா நீளமானதா சட்டம்-ஒழுங்கை பேணிக்காப்பதில் உங்க ஸ்டைல் என்ன சார்?

சட்டம் ஒழுங்கு காவல் பணியில் எனக்கு 20 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளது. போலீஸ் பொதுமக்கள் நல்லுறவை பேணிக்காப்பதில் கவனம் செலுத்துவதால் எனது செல்போன் எண் ஆட்டோமேட்டிக்காகவே பொதுமக்கள் அனைவருக்கும் சென்று சேர்ந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் என்னிடம் நேரடியாக தொடர்பு கொண்டு பேசுகின்றனர். அதன் மூலம் அவர்களது குறைகள் உடனடியாக தீர்க்கப்படுகிறது. அந்த வகையில் தினமும் குறைந்த பட்சம் 100 போன்கால்களை நான் அட்டன்ட் செய்கிறேன். இதில் இன்னொரு பிளஸ் பாய்ன்ட் பொதுமக்கள் தரும் உளவுத்தகவல்களும் எங்களை விழிப்புடன் பணியாற்றுதவதற்கு உந்துததலாகவும், உதவியாகவும் அமைவது மகிழ்ச்சி.

அதுமட்டுமின்றி காலை 10 மணி தொடங்கி மதியம் 3 மணி வரை அலுவலகப் பணிகள், பின்பு மாலை வேலையில் மாவட்டம் முழுவதும் சுற்றி ரவுண்டு அடிப்பேன். ஒரு நாளைக்கு சுமார் 400 கிலோ மீட்டராவது காரில் பயணம் செய்தால்தான் தூத்துக்குடியை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடிகிறது. அந்த வகையில் நள்ளிரவு
2, 3 மணிக்கு கூட பொதுமக்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரச்சனைகளை தெரிவிக்கிறார்கள். அந்த சமயத்தில் கூட நான் அவற்றை களைவதில் கவனம் செலுத்துகிறேன்.

  • ரவுடி துரைப்பாண்டி என்கவுண்டர் எப்படி நடந்தது எப்படி குறித்து….?

துரைப்பாண்டி மீது தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகை, கன்னியாகுமரி உள்பட ஏழு மாவட்டங்களில் ஆள் கடத்தல், கொலை, கொலை முயற்சி உள்பட 35 வழக்குகள் உள்ளன. சமீபத்தில் பாவூர் சத்திரத்தில் ஒரு கொலை வழக்கில் அவர் தலைமறைவாகவே இருந்தார். அவர் தூத்துக்குடியில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் வரவே அந்த அடிப்படையில் அவரை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் துரைப்பாண்டியனை பிடிக்க சென்ற போது போலீசாரை கொல்ல முயன்றுள்ளான். அப்போது போலீசார் தங்கள் உயிரை காத்துக் கொள்ள என்கவுன்டர் செய்ய வேண்டியதாகி விட்டது.

  • அமைச்சரின் உதவியாளர் காவலரை தாக்கிய சம்பவத்தில் உண்மை நிலை என்ன?

அவர்கள் இருவரும் ஏற்கனவே ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்தவர்கள் பழகிய பழக்கம் உடையவர்கள்தான். காரை அப்புறப்படுத்த சொன்ன போது இரண்டு பேருக்கும் இடையில் வாக்குவாதம் தள்ளுமுள்ளு மாறி இருக்கிறது. அதற்குப்பிறகு அவர்கள் ஏற்கனவே பழக்கம் உள்ளதால் அவர்கள் இரண்‌‌‌டு பேரும் சமாதானமாகி விட்டார்கள். இந்த சம்பவத்தை ஊடகங்கள் தான் மீண்டும் மீண்டும் பெரிதாகி கொண்டிருக்கின்றன.

19,724FansLike
124FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் நடைபெறும்‌‌‌ இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களில்...

0
திருநெல்வேலி - நவ -27,2022 Newz - webteam தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சரக...

தூத்துக்குடியில் இரண்‌‌‌டாம்‌‌‌ நிலை காவலர் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு கண்காணிப்பு அதிகாரி டிஐஜி...

0
தூத்துக்குடி - நவ -27,202 Newz - webteam தூத்துக்குடியில் 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுதும் மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள...

நெல்லையில் அபகரிக்‌‌‌கபட்ட 90,செண்ட் நிலம் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் வழங்கினார்

0
திருநெல்வேலி - நவ -26,2022 Newz - webteam 90 செண்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த சரோஜா என்பவருக்கு சொந்தமான...

நாளை நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வின் விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி அறிக்கை...

0
தூத்துக்குடி - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட...

நாளை நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வுக்கு போலீசார் செய்யவேண்டிய பணிகள் குறித்து மாவட்ட...

0
திண்டுக்கல் - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெற உள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வுக்கு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து திண்டுக்கல்...

தற்போதைய செய்திகள்