தேனி – அக் -18,2021
செய்தியாளர் – செல்வகுமார்
டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் குருபூஜையை முன்னிட்டு தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுடன் தீவிர ஆலோசனை
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா உட்பட்ட அனைத்து தேவர் சமுதாய தலைவர்களையும் அழைத்து பெரியகுளம் துணைக் கண்காணிப்பாளர் முத்துக்குமார் ஆலோசனை மேற்கொண்டார்… தமிழ்நாட்டின் நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் பட்சத்தில் 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாள் 30-10-2021 தேதி ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கமுதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை நிகழ்ச்சி பிற மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது… தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரோ பிரவீன் உமேஷ் அறிவுறுத்தலின்படி கூட்டம் நடைபெற்றது.. நடக்க இருக்கும் தேவர் குருபூஜையை முன்னிட்டு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குருபூஜை விழாவிற்கு செல்வதற்கு சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் தடை உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக பொதுமக்கள் மேற்படி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மேலும் பதிவு பெற்ற அரசியல் கட்சி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமே இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் முன் அனுமதி பெற 18 10 2021 முதல் 24 10 2011 வரை ramanathapuram. nic. Inn என்ற இணையதளத்தில் முன் அனுமதி மற்றும் வாகன அனுமதி பெற்று 5 நபர்களுக்கு மிகாமல் மற்றும் மூன்று வாகனங்களுக்கு மிகாமல் செல்ல அனுமதிக்கப்படுகிறது அவ்வாறு செல்லும் போது சொந்த வாகனங்களில் மட்டுமே வர வேண்டும், வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.. காளையார்கோவில் மற்றும் பசும்பொன் குருபூஜை மற்றும் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு ஃபிளக்ஸ் போர்டுகள் பேனர்கள் மைக்செட் போன்ற மேளதாளங்கள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, அரசு மற்றும் பொது ஸ்தாபன சம்பந்தப்பட்ட சுவர்களில் எழுதுவது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது,ஏற்கனவே இது சம்பந்தமாக சுவர்களில் இந்தியர்கள் எழுதப்பட்டிருந்தால் உடனடியாக அளிக்கப்பட வேண்டும், பிறர் மனதை புண்படுத்த வசனங்கள் மற்றும் கோஷங்களை எழுப்பக்கூடாது, முன் அனுமதி பெற்ற அரசியல் தலைவர்கள் காவல்துறையினர் அனுமதி வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்,வாகனத்தில் பேனர்கள் கட்டக்கூடாது, வாகனத்தில் செல்பவர்கள் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி கொண்டு செல்லக்கூடாது, வாகனங்கள் செல்லும் சாலையில் பாதுகாப்பில் உள்ள காவல்துறையினர் அறிவுரைகளை ஏற்று நடத்த வேண்டும் காவல் சோதனைச் சாவடியில் வாகனங்களை நிறுத்தும் சோதனை செய்தால் வாகனங்கள் நிறுத்தி சோதனை ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், ஒவ்வொரு வானத்திற்கும் ஒரு அமைப்பாளர் பெயர் அவரது செல்போன் நம்பர் மற்றும் வாகன ஓட்டியின் செல்போன் நம்பர் ஆகியவற்றை காவல்துறைனற்கு கொடுக்க வேண்டும், ஒவ்வொரு குழுக்களும் வாகனங்களில் செல்லும் நபர்களின் விவரங்களும் மற்றும் விழா முடிந்து திரும்பும் நேரம் பற்றி காவல்துறையினர் தெரிவிக்க வேண்டும், ஒவ்வொரு வாகனமும் சென்று திரும்பும் வரை ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதனை அமைப்பாளர் பொறுப்பாவார் , உள்ளூரில் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் சம்பந்தமாக நிர்வாகிகள் முன்கூட்டியே காவல்துறையினர் தெரிவித்து அனுமதி பெற வேண்டும், உள்ளூர் நிகழ்ச்சிகள் மற்றும் சமுதாயத்தினரின் எவ்வகையிலும் தொந்தரவு இல்லாத வகையில் செயல்படுத்திக் கொள்ள வேண்டும்…. என்றும் காவல்துறையினர் கட்டுப்பாடை மீறி யாரும் செயல்பட வேண்டாம் என்று டிஎஸ்பி முத்துக்குமார் தேவர் சமுதாயத் தலைவர்களிடம் கேட்டுக் கொண்டார்…உடன் பெரியகுளம் வடகரை ஆய்வாளர் மீனாட்சி பெரியகுளம் தென்கரை ஆய்வாளர் சுகுமாரன்,மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்….