75.8 F
Tirunelveli
Wednesday, December 7, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி – அக்-24,2021

முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் வைத்து இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் இ.கா.ப அவர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசும்போது அனவரதநல்லூர் கிராமம் பல்வேறு சமுதாய மக்கள் அமைதியாக வாழும் எந்த பிரச்சனை இல்லாத நல்ல கிராமம், ஒரு சிலர் செய்யக்கூடிய சிறு தவறுகளால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அதுபோன்று எவ்வித பிரச்சனையும் இல்லாமல் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருப்பதற்காகத்தான் இந்த சமுதாய விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கிராமத்தில் பல்வேறு சமுதாய மக்கள் வாழ்ந்து வந்தாலும் ஜாதி, மத பேதமின்றி எவ்வித பிரச்சனையில்லாமல் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும், இளைஞர்கள் மது போன்ற தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகமால் இருக்க வேண்டும், ஏனென்றால் இதன் மூலமும் அதிக சமுதாய பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. மேலும் இதுபோன்ற பிரச்சனைகள் சம்மந்தமாக ஒரு இளைஞர் மேல் வழக்குபதிவு செய்ய நேர்ந்தால் அவரின் நற்பெயர் பாதிக்கப்படுவதோடு, அவருக்கு அரசு வேலை மற்றும் தனியார்துறையிலும் வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதுடன் அவரின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும், எனவே இளைஞர்கள் இதுபோன்ற பிரச்சனைகளில் ஈடுபடாமல் கல்வியை நன்றாக கற்று எதிர்காலத்தில் சிறந்தவர்களாக திகழ வேண்டும், உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் நாங்கள் உடனடியாக உங்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம், மேலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் பவித்ரா, முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இன்னோஸ்குமார் உட்பட காவல்துறையினர் மற்றும் வசவப்பபுரம் பஞ்சாயத்து தலைவர் சுடலைக்கண்ணு, கவுன்சிலர் பேச்சியம்மாள் உட்பட பொதுமக்கள் உடனிருந்தனர்.

19,724FansLike
125FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வருவதால் தென்மண்டல ஐஜி நேரில் ஆய்வு

0
தென்காசி - டிச -06,2022 Newz - webteam தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வரின்‌‌‌ வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்களுடன் தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்...

போதையில்லா திருச்சியை உருவாக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் விழிப்புணர்வு மாரத்தான்‌‌‌ போட்டி….

0
திருச்சி - டிச -05,2022 Newz - webteam "போதைமில்லா திருச்சி மாநகரை உருவாக்க" மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாநகர காவல்துறை மற்றும் மொராய்சிட்டி இணைந்‌‌‌து நடத்‌‌‌தும்‌‌‌ மாரத்தான் ஓட்டம் திருச்சி...

போக்சோ வழக்கில் இனி கைது செய்ய கூடாது போலீஸ் கமிஷனர் எஸ்பிக்களுக்கு தமிழக டிஜிபி...

0
சென்னை - டிச -05,2022 Newz - webteam போக்சோ வழக்குகளில் கைது மற்றும் புலனாய்வு தொடர்பான சுற்றறிக்கை. உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக் குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை குழந்தைகளுக்கெதிரான பாலியல்...

நெல்லை தூத்துக்குடி குமரி மாவட்ட எஸ்பிக்களுடன் தென் மண்டல ஐஜி ஆலோசனை

0
திருநெல்வேலி - டிச -05,2022 Newz - webteam திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தனிப்படை காவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய தென் மண்டல காவல்துறை...

தென்காசி எஸ்பி அலுவலகத்தில் நெல்லை சரக டிஐஜி ஆய்வு

0
தென்காசி - டிச -02,2022 Newz - webteam தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறைத் துணைத் தலைவர் இன்று ஆய்வு மேற்கொண்டார் தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை ஒட்டி பாதுகாப்பு...

தற்போதைய செய்திகள்