திண்டுக்கல் – அக் – 23,2021
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் எல்லைக்குட்பட்ட அஞ்சலி ரவுண்டானாவில் போக்குவரத்தை சீர் செய்யும் வகையிலும், பொதுமக்களுக்கு உதவும் வகையிலும், தனியார் பங்களிப்புடன் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு அவற்றின் கட்டுப்பாட்டு அறையாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .V.R.ஸ்ரீனிவாசன் புறக் காவல் நிலையம் மற்றும் சிசிடிவி கேமிரா கட்டுப்பாடு அறையை திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்