திருச்சி – அக் – 22,2021
செய்தியாளர் – எஸ்.எம்.பாருக்
திருச்சி மாநகர காவல் ஆணையர் தகார்த்திகேயன். இ.கா.ப.. கடந்த 12.10.2021 ஆம் தேதி காலை திருச்சி மாநகரம் கே.கே.நகரில் உள்ள ஆயுதப்படையில் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவர் மற்றும் காவலர்கள் இதய பரிசோதனை செய்ய சாதாரண பரிசோதனை மட்டும் மேற்கொள்ளப்படுகிறது, இதய பரிசோதனை மற்றும் சர்க்கரை பரிசோதனை செய்ய வசதி இல்லை என தெரிவித்தார்கள். இதனை கருத்தில் கொண்டு, திருச்சி மாநகர காவல் ஆணையர் இன்று திருச்சி மாநகர மாநகரத்தில் பணிபுரியும் காவலர்களின் நலன்கருதி சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரங்களான ரத்த சர்க்கரை அளவு சோதனை செய்ய குளுக்கோ மீட்டர் கருவி, உயரம் அளக்கும் கருவி, சரக்கரை அளவு பார்க்கும் Strips, சிறுநீரில் உப்பு, சர்க்கரை அளவு பார்க்கும் கரூவி, மற்றும் இதய மின் விரைவி (ECGmachine) ஆகிய மருத்துவ பரிசோதனை உபகரணங்களை மருத்துவ பரிசோதனைக்கு காவல் மருத்துவமனைக்கு வழங்கினார்கள். இதன்பொருட்டு கூடுதலாக மருத்துவ உதவிகளை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெறும் உதவியாக இருக்கும் என காவல் ஆணையருக்கு நன்றியினை தெரிவித்தனர்