தென்காசி – அக்-02,2021
தென்காசி மாவட்டம்,Fit India Freedom Run 2.0,75 வது சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் பொதுமக்களிடையே 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலஞ்சியில் பயிற்சி காவல் துறை இயக்குனர் பிரதீப்பிலிப் IPS தலைமையில் மினி மாரத்தான் நடைபெற்றது. இரண்டு கிலோமீட்டர் மாரத்தானனது இலஞ்சியில் துவங்கி வள்ளியூரில் முடிக்கப்பட்டது.இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS , தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் M குமார் , தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் .மணிமாறன் , குற்றாலம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் மேலும் மாணவ மாணவிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டது.