84.1 F
Tirunelveli
Monday, November 28, 2022
முகப்பு மாவட்டம் சென்னை நெல்லை மக்களால் நேசிக்கபட்ட துணை கமிஷனருக்கு தமிழக காவல்துறையில் மிக முக்கிய பதவி

நெல்லை மக்களால் நேசிக்கபட்ட துணை கமிஷனருக்கு தமிழக காவல்துறையில் மிக முக்கிய பதவி

சென்னை – அக் -10,2021

உளவுப்பிரிவின் முக்கிய பணி

ஒரு மாநில அரசின் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கு முதுகெலும்பாக நின்று வெற்றியை ஈட்டுத்தருவது அம்மாநிலத்தின் உளவுப்பிரிவு காவல்துறை ஆகும். அதனாலேயே உளவுப்பிரிவு காவல்துறை தலைவராக திறமையும், அனுபவமும் வாய்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளை தலைவர்களாக நியமிப்பார்கள்.

அந்த வகையில் தமிழக காவல்துறையில் உளவுப்பிரிவில் பணியாற்றி பெயர்பெற்றவர்களில் எம்ஜிஆர் காலத்தில் டிஜிபி மோகன்தாஸ், ஜெயலலிதாவிடம் பணியாற்றிய அலெக்சாண்டர், வெங்கடகிருஷ்ணன், ராமானுஜம் மற்றும் கலைஞர் கருணாநிதியிடம் பணிபுரிந்த ஜாபர்சேட் உள்ளிட்ட அதிகாரிகள் கடந்த காலங்களில் திறமை வாய்ந்தவர்களாக பேசப்பட்டவர்கள். அந்த வகையில் தற்போது திமுக தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமைந்ததும் உளவுத்துறை தலைவராக கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் நியமிக்கப்பட்டார். ஐஜியாக ஈஸ்வரமூர்த்தியும், எஸ்பியாக இளம் ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தனும் உள்ளனர். ஐஜி ஈஸ்வரமூர்த்தியும், ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசிர்வாதமும் உளவுப்பிரிவில் நல்ல கைதேர்ந்த கரை படியாத கரம் உடையவர்கள். மக்கள் நலனில் அதிக அக்கரை செலுத்துபவர்கள்.

முதல்வருக்கு அறிக்கை

மாநிலம் முழுவதும் நடக்கும் அரசியல் கட்சி நிகழ்வுகள், கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஆளுங்கட்சி, அமைச்சர்களின் செயல்பாடுகள், எதிர்க்கட்சிகளுக்குள் நடக்கும் உட்பூசல்கள், ஆட்சியின் சாதக பாதகங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அலசி ஆராய்ந்து ஆய்வு செய்து தினமும் முதல்வருக்கு அறிக்கை அனுப்புவதே உளவுப்பிரிவின் தலையாய பணியாகும்.

உளவுப்பிரிவு போலீசாரின் பணிகள் என்ன?

அதற்கென தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் உளவுப்பிரிவு காவலர், இன்ஸ்பெக்டர் ஆகியோர் டிஎஸ்பி தலைமையில் இயங்குவார்கள். அந்த வகையில் தமிழக உளவுப்பிரிவிற்கு தற்போது வரையில் ஒரே ஒரு எஸ்பி மட்டுமே இருந்து வழி நடத்தி வந்தார். ஆனால் அதனை மாற்றி தமிழக உளவுப்பிரிவு காவல்துறைக்கு கூடுதலாக இன்னொரு எஸ்பியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு எஸ்பி சரவணன் உளவுப்பிரிவு எஸ்பி 2 ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

அது தொடர்பான அரசு உத்தரவில், ‘‘உளவுப்பிரிவு 1 எஸ்பியின் கட்டுப்பாட்டின் கீழ் மாநில உளவுப்பிரிவு கட்டுப்பாட்டு பிரிவு, வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம் என மொத்தம் 5 பிரிவுகளுக்கு தனித்தனி டிஎஸ்பிக்கள் செயல்படுவார்கள். அது மட்டுமின்றி மேலாளர் அலுவலகம், தணிக்கை அலுவலகம், போட்டோ கிராபி பிரிவு, காவலர் சுருக்கெழுத்துப் பிரிவு பிரிவு ஆகியவை உளவுப்பிரிவு 1 எஸ்பியின் கீழ் இயங்கும்.
அதே போல உளவுப்பிரிவு எஸ்பி 2 கட்டுப்பாட்டின் கீழ் தமிழகம் முழுவதும் மொத்தம் 9 டிஎஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஐந்து பேர் பி, சி, டி, இ, எப் ஆகிய பெயர்களில் செயல்படுவார்கள். மேலும் செய்திகள் தயார் செய்வதற்கு ஒரு டிஎஸ்பியும், அவற்றை பகுப்பாய்வு செய்வதற்கு ஒரு டிஎஸ்பியும், சென்னை வடக்குக்கு ஒரு டிஎஸ்பி, தெற்குக்கு ஒரு டிஎஸ்பியும் என 9 டிஎஸ்பிக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக உளவுப்பிரிவில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள உளவுப்பிரிவு எஸ்பி 2 மற்றும் ஓசிஐயூ என்ற ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வுப்பிரிவு ஆகியவை வழக்கம் போல உளவுப்பிரிவு ஏடிஜிபியின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும்’’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் உளவுப்பிரிவு எஸ்.பி நியமனம்

தமிழகத்தில் உளவுப்பிரிவுக்கு இரண்டு எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டதன் தமிழக உளவுப்பிரிவு மேலும் பலம் வாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி தமிழத்தில் ஆளும்கட்சி மேலும் விழிப்புடன் செயல்படுவதற்கு உளவுப்பிரிவின் இந்த அதிரடி மாற்றம் பயனுள்ளதாக அமையும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.

19,724FansLike
124FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் நடைபெறும்‌‌‌ இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களில்...

0
திருநெல்வேலி - நவ -27,2022 Newz - webteam தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சரக...

தூத்துக்குடியில் இரண்‌‌‌டாம்‌‌‌ நிலை காவலர் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு கண்காணிப்பு அதிகாரி டிஐஜி...

0
தூத்துக்குடி - நவ -27,202 Newz - webteam தூத்துக்குடியில் 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுதும் மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள...

நெல்லையில் அபகரிக்‌‌‌கபட்ட 90,செண்ட் நிலம் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் வழங்கினார்

0
திருநெல்வேலி - நவ -26,2022 Newz - webteam 90 செண்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த சரோஜா என்பவருக்கு சொந்தமான...

நாளை நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வின் விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி அறிக்கை...

0
தூத்துக்குடி - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட...

நாளை நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வுக்கு போலீசார் செய்யவேண்டிய பணிகள் குறித்து மாவட்ட...

0
திண்டுக்கல் - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெற உள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வுக்கு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து திண்டுக்கல்...

தற்போதைய செய்திகள்