திருநெல்வேலி – அக் – 25,2021
திருவாரூர் மாவட்டம்
அ/மி தியாகராஜர் திருக்கோவில்-
கமலாலய குளக்கரை தென்கரை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பாதிப்பு
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை
பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான புனித ஸ்தலமான
அ/மி தியாகராஜர் திருக்கோவில் அருகில் அமைந்துள்ள கமலாலய குளக்கரையின் தென்கரை சுற்றுச்சுவரின் ஒரு பகுதி
நேற்று பெய்த கனமழை காரணமாக இடிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் அப்பகுதி மேலும் சேதமடையும் சூழ்நிலை ஏற்பட்டதால் தகவலறிந்து
சம்பவ இடத்திற்கு
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
விஜயகுமார் IPS
திருவாரூர் நகர காவல்துறையினர் மற்றும்போக்குவரத்து காவலர்கள், ஆகியோருடன்
சென்று கமலாய குளக்கரை இடிந்த பகுதியை பார்வையிட்டு
சேதமடைந்த பகுதியை சுற்றி பாதுகாப்பு அரண்(BARRICADE)
அமைத்து பொதுமக்கள் நலன்கருதி
கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
அ/மி தியாகராஜர் திருக்கோவில் மற்றும் கமலாலய குளக்கரை வளாகத்தில் பாதுகாப்பு தடுப்பு அரண்கள் அமைத்து காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்து கண்காணிக்கப்
படுகிறது.
அப்பகுதியில்
ஒரு போக்குவரத்து ஆய்வாளர்
2- உதவி ஆய்வாளர்கள் மற்றும் 20 காவலர்கள்
24 மணிநேர பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கும்பகோணம் மார்க்கத்திலிருந்து வரும் கன மற்றும்
இலகு ரக வாகனங்களை
E.B ஜங்ஷனில் தடுத்து
விளமல்-மெயின்ரோடு வழியாக திருப்பப்பட்டுள்ளது.
கமலாலயம் குளக்கரை வடக்கு பகுதியில் பாதுகாப்பு அரண்கள் அமைத்து முற்றிலும் தடுக்கப்பட்டு அவ்வழியில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.
கமலாலயம் கிழக்கு மேற்கு, வடக்கு
கரைகள் வழியாக
உள்ளூர் வாசிகள்,மற்றும்
மருத்துவமனைக்கு செல்லும் இருசக்கரவாகனங்
களுக்கு மட்டும் முறையான தணிக்கைக்கு பிறகு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்படி சுற்றுச்சுவரை சரிசெய்யும் வரை திருவாரூர் பகுதி மக்கள் மாவட்ட காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்