திருநெல்வேலி – அக்-02,2021
நெல்லை மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களின் குழந்தைகளுக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்த நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள்.
நெல்லை மாநகர காவலர்களின் குழந்தைகள் நலன் கருதி நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் ஏற்பாட்டில், மதுரையில் crime branch பகுதியில் செயல்பட்டு வரும் TVS நிறுவனத்திலிருந்து தனியார் வேலை வாய்ப்பு முகாம், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இம்முகாமில் நெல்லை மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகளின் குழந்தைகளுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு பெற்று தரும் முன்னோடி திட்டத்தை, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் முனைவர் Nசெந்தாமரைக் கண்ணன் இ.கா.ப அவர்கள் துவக்கி வைத்தார் இம்முகாமை மதுரை TVS நிறுவன உதவி மேலாளர் (HR) மௌலீஸ்வரன் அவர்கள், BIO-DATA களை பெற்றுக்கொண்டு நேர்காணல் நடத்தினார்கள். உடன் நெல்லை மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் , நெல்லை மாநகர நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் நாகசங்கர கலந்து கொண்டார்கள். வேலை வாய்ப்பு நேர்காணலில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்