76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் சென்னை ஓ.பி.எஸ் பெயரில் மோசடி குற்றவாளியை அலேக்கா தூக்கிய சென்னை குற்றப்பிரிவு போலீசார்

ஓ.பி.எஸ் பெயரில் மோசடி குற்றவாளியை அலேக்கா தூக்கிய சென்னை குற்றப்பிரிவு போலீசார்

சென்னை – அக் – 20,2021

முன்னாள் துணை முதலமைச்சர் பெயரில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த மதனகோபால் என்பவரை கைது செய்த, மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

ஓய்வு பெற்ற SBI வங்கி அதிகாரி கமலக்கண்ணன் என்பவருக்கு கடந்த 2016 ம் ஆண்டு அறிமுகமான மாதவரத்தை சேர்ந்த மதனகோபால் என்பவர் முன்னாள் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் சகோதரனின் மகன் என்றும் அதனடிப்படையில் தன்னால் அரசு வேலை வாங்கி தரமுடியும் எனக்கூறியதை நம்பி கமலக்கண்ணன் தனது மகள்களுக்கு வேலை வேண்டி ரூ.44,50,000/- மதனகோபாலிடம் கொடுத்துள்ளார். ஆனால் மதனகோபால் போலியான பணி நியமன ஆணையை கொடுத்து கமலக்கண்ணனை ஏமாற்றியுள்ளார். மேற்படி சம்பவம் குறித்து கமலக்கண்ணன் மத்தியகுற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மத்தியகுற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு ஆய்வாளர் கலாராணி தலைமையில் உதவி ஆய்வாளர் சுபாஷ்சந்திரபோஸ், தலைமைக் காவலர்கள் சண்முகம் (த.கா.எண்.26801), வரலட்சுமி (த.கா.27686) முதல் நிலைக்காவலர் ரஜினி, (மு.நி.கா.47479), காவலர்கள் இளங்கோ (கா.49245) அபினேஷ் , செல்வி.ஆனந்தி (54898) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு, எதிரி மதனகோபால் (வ37) திருவள்ளூர் மாவட்டம் என்பவரை கைது செய்தனர். மேற்படி எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த, மத்திய குற்றப்பிரிவு, காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப. நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்