84.4 F
Tirunelveli
Tuesday, May 24, 2022
முகப்பு மாவட்டம் திருச்சி "திருச்‌‌‌சி - போலீஸ் பீட் சிஸ்டம் துவங்கிய அன்றே குற்றவாளியை விரட்டிபிடித்த போலீசாருக்‌‌‌கு மாவட்‌‌‌ட...

“திருச்‌‌‌சி – போலீஸ் பீட் சிஸ்டம் துவங்கிய அன்றே குற்றவாளியை விரட்டிபிடித்த போலீசாருக்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி பாராட்‌‌‌டு…

திருச்சி – அக் -03,2021

செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்

போலீஸ் பீட் சிஸ்டம் நடைமுறைபடுத்தப்பட்ட அன்றைய தினமே குற்றவாளிகளை விரட்டி பிடித்த திருச்சி மாவட்ட காவலர்களுக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு

திருச்சி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்டத்தில் உள்ள 30 சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்திற்கும் புதிதாக 36 பீட் காவல் அலுவலர்கள் 01.10.2021ஆம் தேதி பீட் அலுவலுக்கென தனி வாகனங்களுடன் நியமிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வினை திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் I.P.S., திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணன் சுந்தர் I.P.S., திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.பா மூர்த்தி I.P.S., ஆகியோர் முன்னிலையில் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக புதிதாக பீட் அலுவலர்கள் நியமிக்கப்பட்ட அன்றைய தினமே லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பீட் அலுவலர்களான காவலர். அருண்குமார் மற்றும் காவலர். மணிகண்டன் ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது லால்குடி சந்தைப்பேட்டையில் ஒரு நகை அடகு கடையில் இரவு கன்னக்களவு நடந்ததை அறிந்து துரிதமாக செயல்பட்டு காவல் உதவி ஆய்வாளர் கேசவமூர்த்தி அவர்களுடன் இணைந்து சில மணித்துளிகளிலேயே மேற்படி குற்ற சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை பிடித்தும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை கைப்பற்றியும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேற்படி பீட் அலுவலர்களின் சிறப்பான மெச்சத் தகுந்த பணியினை காவல் உயர் அதிகாரிகள் பாராட்டினர். மேலும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி I.P.S., பணம் வெகுமதி அளித்து வெகுவாக பாராட்டினார்.

19,724FansLike
84FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மார்கெட்டில் முன்விரோத கொலையில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

0
நெல்லை மாநகரம் - மே-23,2022 நெல்லை மாநகரம் தச்சநல்லூர் மார்க்கெட்டில் முன்விரோதம் காரணமாக கொலையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுப்பையாபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த...

“குவாரியில் சிக்கியிருந்த 4,நபர்களின்‌‌‌ உடல்கள் 8,நாட்களுக்கு பிறகு காவல்துறை, தீயனைப்புதுறை மற்‌‌‌றும்‌‌‌...

0
திருநெல்வேலி - மே -23,2022 திருநெல்வேலி குவாரி விபத்தில் சிக்கியிருந்த 6 நபர்களில் 2 நபர்களை உயிருடனும் 4 நபர்களின் உடலை 8 நாட்கள் தொடர் மீட்புபணிக்கு பின் மீட்ட காவல்துறையினர், தீயணைப்பு துறையினர்...

மூத்தோர் தடகள போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு எஸ்பி பாராட்டு

0
விழுப்புரம் - மே- 23,2022 அகில இந்திய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற விழுப்புரம் மாவட்ட விளையாட்டு வீரர்கள் காவல் கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். கடந்த 20,21,22 ஆகிய...

இறகுபந்து போட்டியில்‌‌‌ தங்க பதக்கம் வென்ற காவல் ஆய்வாளருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு!!!!

0
மதுரை - மே-23,2022 திருவனந்தபுரத்தில் நடந்து வரும் 4வது தேசிய மூத்தோர் விளையாட்டு போட்டி 18.05.2022 துவங்கி 22.05.2022 அன்று நிறைவு பெற்றது. இதில் வயது வாரியான போட்டிகளில் அனைத்து மாநிலங்களிலும் பங்கேற்றனர். இப்போட்டியில்...

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில்‌‌‌ உயிழந்தவர்களின் நினைவு நாளை முன்னிட்டு 2500 போலீசார்‌‌‌...

0
தூத்துக்குடி - மே -20,2022 தூத்துக்குடி தனியார் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி...

தற்போதைய செய்திகள்