76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி "காவலர்‌‌‌ மனைவி கொலையில்‌‌‌ 2,மணிநேரத்தில் குற்‌‌‌றவாளி கைது தனிப்படை போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு...

“காவலர்‌‌‌ மனைவி கொலையில்‌‌‌ 2,மணிநேரத்தில் குற்‌‌‌றவாளி கைது தனிப்படை போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு…

தூத்துக்குடி – அக்-01,2021

குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் கொலை – சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு எதிரிகளை விரைந்து கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவு – சம்மந்தப்பட்ட எதிரி 2 மணி நேரத்தில் கைது – தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . எஸ். ஜெயக்குமார் பாராட்டு.

குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடன்குடி பெரியவன்தட்டு பகுதியை சேர்ந்தவர் செல்வமுருகன் மனைவி அருணா (40), இவரது கணவரான செல்வமுருகன் என்பவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 01.10.2020 அன்று குடும்ப பிரச்சினை காரணமாக விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று 30.09.2021 அன்று அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் குலசேகரப்பட்டினம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருணாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், இ.கா.ப மேற்பார்வையில் குலசேகரபட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையற்கரசி தலைமையில் முதல் நிலை காவலர் அருள் ஜோதி, காவலர்கள் வெங்கடேசபெருமாள் மற்றும் சுந்தரராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட எதிரியை கண்டுபிடித்து விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.

மேற்படி தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மேற்படி அருணாவை கொலை செய்தது, அவரது கணவர் செல்லவமுருகனின் அக்கா மகனான உடன்குடி பெரியவன் தட்டு பகுதியை சேர்ந்த இசக்கி மகன் முத்துகுமார் (26) என்பது கண்டுபிடித்து, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவரது மாமா செல்வமுருகனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை இன்று (01.10.2021) அனுஷ்டிப்பது சம்மந்தமாக நேற்று (30.09.2021) அருணாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அருணா சென்ற வாரம் நட்சத்திர பலன்படி அவரது நினைவு தினத்தை தனது குடும்பத்தாருடன் சேர்ந்து ராமேஸ்வரத்தில் முடித்துவிட்டதாக கூறி, நாளை அவரது நினைவு தினத்தை எளிய முறையில் வீட்டில் வைத்து அனுஷ்டித்தால் போதும் என்று கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்து, மேற்படி முத்துகுமார் அருணாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அருணாவை கத்தியால் தாக்கி கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த 8 பவுன் தங்க செயினையும் பறித்து சென்றது தெரிவந்துள்ளது, இதனையடுத்து முத்துக்குமாரிடமிருந்து மேற்படி 8 பவுன் தங்கச் செயினும், கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்யதனர்.

சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் எதிரியை கைது செய்த, தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்