திருநெல்வேலி – அக் – 03,2021
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் தனியார் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப தலைமையில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று நெல்லை மாநகர பகுதிகளில் இயங்கிவரும் லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விடுதிகளில் தங்க வரும் நபர்கள் சந்தேகப்படும்படி இருந்தாலோ வடமாநிலங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலோ காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும் படியும், தங்களது பதிவேட்டில் சரியான முகவரி மற்றும் அலைபேசி எண்களை பதிவு செய்யும்படியும், லாட்ஜ்களில் தங்க வரும் நபர்களின் பொருட்கள் சந்தேகப்படும் படியாக இருந்தால் காவல்துறைக்கு தெரியப்படுத்துமாறும் அறிவுரை வழங்கினார். மேலும் நிர்வாகிகளிடம் குறைநிறைகளை கேட்டு குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார்கள். அனைத்து விடுதிகளின் Entry point – ல் தரமான CCTV Camara – க்களை பொருத்துமாறும் ஆலோசனை வழங்கினார். ஆலோசனை கூட்டத்தில் குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் , நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் நாகசங்கர் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் பிறைச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்