மதுரை – அக் – 06,2021
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயற்சி செய்தவர்களை ஒரு மணி நேரத்தில் பிடித்த காவல்துறையினருக்கு காவல் ஆணையர் பாராட்டு சுப்பிரமணியபுரம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குமரேசன் மற்றும் இரு சக்கர ரோந்து வாகன எண் VII-ல் இரவு ரோந்து பணியில் இருந்த சுப்பிரமணியபுரம் குற்றப்பிரிவு தலைமை காவலர் ஜெயபிரகாஷ் மற்றும் சிறப்பு காவல்படை காவலர் ஆதீஸ்வரன், நடை பயண ரோந்து பணியில் இருந்த சுப்பிரமணியபுரம் குற்றப்பிரிவு காவலர் சிவக்குமார் மற்றும் சிறப்பு காவல்படை காவலர் தாமோதர கண்ணன் ஆகிய ஐந்து நபர்களும் நேற்று இரவு சுப்பிரமணியபுரம் காவல் நிலைய எல்கைக்குள் இரவு ரோந்து பணியில் இருந்தபோது அதிகாலை 01.30 மணிக்கு ஒரு கொள்ளை சம்பவம் நடைபெற போவதாக கிடைத்த தகவலை பெற்று அதனை பின் தொடர்ந்து உடனடியாக 1 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்தனர்.பணியில் விழிப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்றிய ஐந்து காவல்துறையினரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., இன்று நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.