புதுக்கோட்டை – அக் – 12,2021
பெண் காவலர்களின் நலன் கருதி மழலையர் பள்ளி மற்றும் குழந்தைகள் காப்பகம் சிறப்பான முறையில் மாவட்ட காவல் ஆயுதப்படை வளாகத்தில் திறப்பு
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களது உத்தரவுப்படி புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பெண் காவலர்களின் நலன் கருதி, குழந்தைகள் பகல் காப்பகம் மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப., திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணன் சுந்தர் இ.கா.ப., மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் இ.கா.ப., ஆகியோர் தலைமையில் துவங்கி வைக்கப்பட்டது.
இந்த குழந்தைகள் காப்பகத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்கான பூங்கா மற்றும் குழந்தைகளுக்கு பிடித்தமான வகையில் ப்ரத்யேகமான முறையில் வண்ண வண்ண வரைபடங்கள், விளையாட்டுப் பொருட்கள், தங்கள் வாழ்க்கைக்கு பயனுள்ள தகவல்கள் போன்றவை இடம் பெறும் வண்ணம் எழில்மிகு தோற்றத்துடன் சிறப்பான முறையில் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய மண்டலத்தைச் சார்ந்துள்ள ஒன்பது மாவட்டங்களில் முதல்முறையாக புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இந்த மழலையர் பள்ளி மற்றும் குழந்தைகள் காப்பகம் துவங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முயற்சியால் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் கீதா, ஜெரினா பேகம், இராஜேந்திரன் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டார்
மேலும் முதற்கட்டமாக இக்காப்பகத்தில் 25 காவலர்களின் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் முருகராஜ், காவல் ஆய்வாளர் கோபிநாத், உதவி ஆய்வாளர்கள் அழகர் மற்றும் ஸ்டீபன் ஆகியோர்கள் சிறப்பான முறையில் செய்துள்ளார்