தென்காசி – அக் -23,2021
தென்காசி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு இன்று தென்காசி ஈஸ்வரன் பிள்ளை அரசு மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாராந்திர கவாத்தில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .கிருஷ்ணராஜ் IPS ஆயுதப்படை காவலர்களின் கவாத்திணை பார்வையிட்டார். மோட்டார் வாகனப் பிரிவு வாகனங்களை ஆய்வு மேற்கொண்டு வாகன ஓட்டுநர் காவலர்களுக்கு வாகனங்களை உரிய முறையில் பராமரித்து முறையாக வைத்துகொள்ள வேண்டும் எனவும் வாகனங்களில் எப்போதும் முதலுதவி பெட்டி கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.மேலும் ஒவ்வொரு காவலர்களிடமும் அவர்களின் குறை நிறைகளை நேரடியாக கேட்டறிந்து அதனை விரைவில் நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார்.இந்நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சுசில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மார்டின் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் கலந்து கொண்டனர். காவல் கண்காணிப்பாளர் தங்களிடம் குறைகளை கேட்டு விரைவில் நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக ஆயுதப்படை காவலர்கள் தெரிவித்துக் கொண்டனர்..