திண்டுக்கல் – அக் -29,2021
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் புதிதாக அமைக்கப்பட்ட 25 சிசிடிவி கேமராக்கள் மற்றும் பிரதிபலிப்பு கண்ணாடிகளின் செயல்பாட்டினை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்தார்
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேதாஜி நகரில் காவல்துறையினர் மற்றும் நேதாஜி நகர் நல சங்க அமைப்பினர் சார்பாக குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக புதிதாக அமைக்கப்பட்ட 25 கேமராக்கள் மற்றும் வாகன விபத்துகளை தடுக்கும் விதமாக பிரதிபலிக்கும் கண்ணாடிகளின் செயல்பாட்டினை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் இன்று துவக்கி வைத்தார்.
மேலும் நேதாஜி நகரில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் பிரதிபலிப்பு கண்ணாடிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்
இந்நிகழ்ச்சியில் பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் அவர்கள் மற்றும் பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள், பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்