தூத்துக்குடி – அக் – 04,2021
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 38 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 09.09.2021 அன்று ரியல் எஸ்டேட் தொழிலதிபரை கடத்தி பணம் பறித்த வழக்கில் சம்மந்தப்பட்ட 6 எதிரிகளை கைது செய்து 6 லட்சம் பணம் மற்றும் 20 பவுன் நகைகளை கைப்பற்றிய கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர்முத்து, உதவி ஆய்வாளர் அந்தோணி திலீப், நாலாட்டின்புதூர் தலைமை காவலர் மணிகண்டன், கயத்தாறு காவல் நிலைய காவலர்கள் பாலகிருஷ்ணன், சத்ரியன், கருப்பசாமி, கார்த்திக் மற்றும் ஊர்காவல் படை காவலர் ஆறுமுகசங்கர் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடி வந்த எதிரியை கைது செய்து ரூபாய். 3 லட்சம் மதிப்புள்ள 6 இருசக்கர வாகனங்களை கைப்பற்றிய கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி, உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன், தலைமை காவலர் ஆனந்த் அமல்ராஜ், முதல் நிலை காவலர்கள் பாண்டியராஜ், செந்தில்குமார் மற்றும் காவலர் சரவணக்குமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணத்திற்காக 9 மாத குழந்தையை விற்ற வழக்கில் குழந்தையை 48 மணி நேரத்தில் விரைந்து மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்து மேற்படி குழந்தையை விற்பனை செய்தவர்களில் 3 எதிரிகளை கைது செய்த சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம், உதவி ஆய்வாளர்கள் சங்கர், ராமகிருஷ்ணன், தலைமை காவலர் மகாராஜா, முதல் நிலை காவலர் பாலகுமார், முதல் நிலை பெண் காவலர் சுந்தரி, காவலர் திவான் பாட்ஷா மற்றும் பெண் காவலர் முருகலெட்சுமி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலைக்கு பழிக்குப் பழியாக பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சாம்சுதர்சன் வினோ என்பவரை கைது செய்த சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன், தட்டார்மடம் சிறப்பு உதவி ஆய்வாளர் டேவிட் கிறிஸ்துராஜ் மற்றும் மெஞ்ஞானபுரம் காவல் நிலைய தலைமை காவலர் வெலிங்டன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண் காணமால் போன வழக்கில் பலவிதமான முயற்சிகள் மேற்கொண்டு 4 வருடங்களுக்கு பிறகு காணாமல் போன பெண்ணை கண்டுபிடித்த முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துமாலை மற்றும் தலைமை காவலர் ஞானகுரு ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
குலசேகரபட்டினம், திருச்செந்தூர், சாயர்புரம், சாத்தான்குளம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 எதிரிகளை கைது செய்து அவர்களிடமிருந்து 22 பவுன் தங்க நகைகளை மீட்ட திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரம், சைபர் குற்ற பிரிவு உதவி ஆய்வாளர் சுதாகர், திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் ராஜ்குமார், ஆத்தூர் காவல் நிலைய தலைமை காவலர் இசக்கியப்பன் மற்றும் ஆறுமுகநேரி காவல் நிலைய தலைமை காவலர் சொர்ணராஜ் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 1995ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரி சந்திரமோகன் 22 ஆண்டுகளாக தேடப்பட்டு தலைமைறைவாக இருந்தவரை சென்னையில் வைத்து கைது செய்த விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கங்கைநாதபாண்டியன், சூரங்குடி காவல் நிலைய தலைமை காவலர் ராஜபாண்டி மற்றும் முதல் நிலை காவலர் சங்கிலிமுருகன் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2016ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கபட்டு கைது செய்யாமல் இருந்தவந்த எதிரியை கைது செய்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கதிரேசன் என்பவரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காலாங்கரைபட்டியிலிந்து கழுகுமலை சென்ற அரசு பேரூந்தில் பயணம் செய்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொலைத்த அவரது ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் ரூபாய். 5,000/- பணம் உள்ள மணிப்பர்ஸை, மனிதநேயத்துடன் எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த கழுகுமலை காவல் நிலைய காவலர் கதிரேசன் என்பவரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த கொலை மிரட்டல் வழக்கு எதிரிக்கு நீதிமன்றத்தில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் ரூபாய் 2,000/- பெற்று தந்த சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் ஜேம்ஸ்பால் என்பவரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 38 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உடனிருந்தார்.