கோயம்புத்தூர் – அக் -07,2021
கோயம்புத்தூர் மாவடடத்தில் தீவிர குற்றப்பிரிவில் காவல் ஆய்வாளராக தற்போது பணிபுரிந்து வரும் கலையரசி என்பவர். பொருளாதார குற்றப்பிரிவில் ஆய்வாளராக பணிபுரிந்தபோது. மோசடி நிதி நிறுவனங்கள் மீது பெறப்பட்ட புகார் மனுக்களில் உடனடியாக வழக்குப் பதிவு செய்யாமல், மிகவும் காலதாமதமாக வழக்கு பதிவு செய்து. பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டு, பொதுமக்களுக்கு பாதகமாக நடந்து கொண்டதால், கோயமுத்தூர் சரக காவல் துறை துணைத் தலைவரின் ஆணையின்படி இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.