சேலம் – அக் -20,2021
சேலம் மாநகரம் தெற்கு சரகம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள 110 நவீன C.C.T.V கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோதா,I.P.S., தொடங்கி வைத்து, பொதுமக்களிடையே உரையாற்றுகையில் தற்போதைய நிலையில் கண்காணிப்பு கேமராக்களின் முக்கியத்துவம் குறித்தும், மிகவும் பரபரப்பாக இயங்கும் இப்பகுதிகளுக்கு 110 C.C.T.V கண்காணிப்பு கேமராக்கள் போதுமானதாக இருக்காது எனவும், விரைவில் இப்பகுதி முழுவதும் குறைந்தது 1000 CCTV நவீன கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டும் எனவும், ஒரு CCTV கண்காணிப்பு கேமரா நிறுவுவது 24 மணி நேரமும் 10 வாட்ச்மேன்கள் பாதுகாப்பு செய்வதற்கு சமமாகும் என்றும், நகர காவல் நிலையத்தின் 150 ஆண்டு கால வரலாற்றில் ஒரு பெண் சம்மங்கி காவல் ஆய்வாளராக பொறுப்பேற்று இருப்பது இதுவே முதல் முறை என்றும், மேலும் ஒரு சிறப்பு நமது நகர காவல் நிலையம் தமிழக அளவில் மிகச் சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதாகும். விரைவில் சேலம் மாநகர் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் அதிகப்படியான கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார். இவ்விழாவில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் தெற்கு மோகன்ராஜ் கூடுதல் காவல் துணை ஆணையாளர் கும்மராஜா (CWC) மற்றும் காவல்துறை அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் பொதுமக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்