76 F
Tirunelveli
Sunday, December 5, 2021
முகப்பு மாவட்டம் திண்டுக்கல் கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

திண்டுக்கல் – அக் – 17,2021

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் உத்தரவின் படி திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரன் தலைமையில் தாண்டிக்குடி காவல் ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் பத்து காவலர்கள் கொண்ட தனிக்குழு அமைத்து புலன் விசாரணை செய்யப்பட்டது.

இதையடுத்து கொடைக்கானல் மலை அடிவார சோதனைச் சாவடி மற்றும் மலைச் சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை செய்யப்பட்டது. இப்பதிவில் சந்தேகப்படும் படியாக இருந்த சைலோ கார் எண்ணை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இறந்த நபர் புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்லதுறை (30) என்பவர் என தெரியவந்தது, மேலும் இவரை கொடைக்கானல் அழைத்து வந்து கொலை செய்து பள்ளத்தில் தூக்கிப்போட்ட செல்லத்துரையின் தாய், தந்தை, தம்பி ஆகிய மூன்று நபர்களை தனிப்படையினர் திருமயத்தில் வைத்து கைது செய்தனர். மேலும் கொலை செய்ய பயன்படுத்திய இரும்பு ராடு மற்றும் சைலோ கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும் இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு நான்கு நாட்களில் குற்றவாளிகளை கண்டுபிடித்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்

19,724FansLike
55FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ரவுடிகளின்‌‌‌ செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட எஸ்பி தனிப்படை அமைப்பு

0
திண்டுக்கல் - டிச - 04,2021 திண்டுக்கல் மாவட்டத்தில் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரௌடிகள், மற்றும் கொள்ளையர்களை கண்காணிக்கவும் அவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் சிறப்பு தனிப்படைகள் - திண்டுக்கல் மாவட்ட காவல்...

மகளுக்‌‌‌கு பாலியல் தொந்‌‌‌தரவு – தந்தை மீது பாய்ந்தது குண்டாஸ் எஸ்பி அதிரடி...

0
அரியலூர் - டிச -04,2021 காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை: சிறுமியிடம் பாலியல் சீண்டல்கள் செய்த தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அரியலூர் மாவட்டத்தில் தந்தையே தனது மகளை தொடர்ந்து பாலியல் சீண்டல்கள்...

கல்லூரி மாணவனின் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

0
திருவாரூர் - டிச -04,2021 விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிய கல்லூரி மாணவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து காப்பாற்றிய செவிலியரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌவுரவிப்பு மன்னார்குடி நகர...

சிசிடிவி கேமரா கண்காணிப்பு நகரமாக மாறிவரும் சேலம் – போலீஸ் கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு

0
சேலம் - டிச - 04,2021 சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலைய சரகத்தில் உள்ள ரெட்டிப்பட்டி, மாமாங்கம், குரங்குசாவடி, சங்கர் தியேட்டர், ஸ்டேட் பாங்க் காலணி, ஸ்வர்ணபுரி அனெக்ஸ், இந்திரா நகர், நகர்மலை...

காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில்‌‌‌ நடைபெற்றது

0
திருப்பத்தூர் - டிச - 03,2021 மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப காவல் பணியில் தரத்தினை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான இடைவெளியை போக்கவும் பணியின் தரத்தினை அளவிடுவது இன்றியமையாததாகும். திருப்பத்தூர் மாவட்ட காவல்...

தற்போதைய செய்திகள்