அரியலூர் – அக் – 13,2021
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் I.P.S., வழிகாட்டுதலின்படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணன் சுந்தர் I.P.S., மற்றும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மேற்பார்வையில், விஜயகுமார், அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஏற்பாட்டில் அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக கொரோனா பெருந்தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் (CHILD WELFARE OFFICERS) 18, பெண்கள் உதவி மையத்தை (WOMEN HELP DESK) சேர்ந்த 16 பெண் காவலர்கள், கொரோனா பெருந்தொற்றால் தாய் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உதவி செய்ய விருப்பமுள்ள 15 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய எதிர்கால திட்டங்கள் குறித்து சிறப்பு பயிற்சி மற்றும் ஆலோசனை கருத்தரங்கம் மாவட்ட காவல் அலுவலகத்தில் 13.10.2021 இன்று நேரடியாகவும் இணைய வழியிலும் நடைபெற்றது.
[13/10, 7:27 pm] +91 94982 12016: ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக அழகேசன்,MABL, செயலாளர் /மூத்த சிவில் நீதிபதி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, அரியலூர் மாவட்டம் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள். சிறப்புரை மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன், I.P.S., காவலர்களுக்கு பின்வரும் ஆலோசனைகளை வழங்கினார். பெண்களுக்கு எதிராக காலம் காலமாக குற்றங்கள் நடந்து வரும் நிலையில் அதை எல்லாம் தகர்த்து எறிந்து பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெண்களை முன்னேற்றுவதற்கு ஒரு தடைக்கல்லாக உள்ளது. அந்த துக்கங்களை நடக்காமல் தடுக்கும் போது தான் பாதுகாப்பான சூழலில் பெண்கள் வாழ்வார்கள். சில கிராமப் பகுதிகளில் குழந்தை திருமணங்கள் பெற்றோர் செய்து வைப்பதால் அவர்களின் வாழ்க்கை வீட்டிலேயே முடிந்துவிடுகிறது. பெண்களின் முன்னேற்றத்தில் என்னென்ன தடையாக உள்ளது பெற்றோர்கள் இல்லாத குழந்தைகள் பெற்றோர் குழந்தையை சரியாக பராமரிக்காமல் இருந்தால் போன்றவைகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறான பெண் குழந்தைகளிடம் women help desk மூலம் தொடர்பு கொண்டு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா எனக்கண்டறிதல் பெண் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்ற கோணத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். Hotspot village -களுக்கு செல்லும் போது அங்கு உள்ள பெண்களிடம் பேசி அங்கு உள்ள பிரச்சனைகளை கண்டறிந்து மேலும் குடிபோதையில் கலாட்டா செய்பவர்களை ஊர் தலைவர்கள் மூலம் யார் யார் மாலை நேரத்தில் ஓய்வாக இருக்கிறார்கள் என்பதை கண்டறிவதன் மூலம் மாணவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கலாம்.
[13/10, 7:27 pm] +91 94982 12016: பணிகள் மூன்று விதமான உள்ளனர்
- குற்றம் நடந்ததற்கு செல்வது Reaction
- குற்றம் நடக்காமல் இருக்க Prevention
- என்னென்ன காரணங்களால் குற்றம் நிகழ்கிறது என்பதை அறிந்து முன்கூட்டியே செயல்படுவது Advance prevention என்று குறிப்பிட்டு ஆலோசனை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லாஹ் உரையாற்றியதாவது பெண்கள் நாட்டின் கண்கள் குழந்தைகளின் எதிர்காலம் பெண்களிடம் தான் உள்ளது என்றும் ஒரு பெண் கல்வி கற்பதன் மூலம் குடும்பம் கல்வி பெறும் குடும்பம் வளமாகும் சூழலில் அந்த கிராமம் வளமாகவும் என்றும் ஒரு கிராமம் செழிப்பாகவும் போது அந்த நாடு சிறப்பானதாக மாறும் என்று கூறினார்கள். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் காவல்துறை விரைந்து செயல்பட்டு குற்றங்கள் நடைபெறாமல் இருக்க மேலும் சிறப்பாக காவல்துறை இயங்கும் என்று அறிவுறுத்தினார்.