77 F
Tirunelveli
Tuesday, December 6, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி மாணவ மாணவியருக்கு சைபர்குற்றங்கள் குறித்து மாவட்ட எஸ்.பி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

மாணவ மாணவியருக்கு சைபர்குற்றங்கள் குறித்து மாவட்ட எஸ்.பி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

தூத்துக்குடி – அக் -,22,2021

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூத்துக்குடி மாவட்ட சைபர் காவல் நிலையம் சார்பாக இன்று மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், சைபர் குறறங்களை தடுக்கவும், அதனை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த விழிப்புணர்வு கூட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கணினி வழி குற்றங்கள் அதிகமாக நடைபெற வாய்ப்பு உள்ளதால் மாணவ மாணவிகள் அதில் கவனமாக இருக்க வேண்டும், பெண்கள் தேவையில்லாமல் தங்கள் புகைப்படம் மற்றும் சுயவிபரங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் எப்பொழுதும் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் கல்வி ஒன்றுதான் அழியாத செல்வம், சமுதாயத்தில் பெண்கள் கல்வி கற்று முன்னேறினால்தான் அந்த சமுதாயம் முன்னேறிய சமுதாயமாக மாறும், மாணவ மாணவிகளுக்கு கல்வியோடு கூடிய ஒழுக்கம்தான் அவர்களை சிறந்தவர்களாக மாற்றும் என்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டும் என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் சைபர் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன், உதவி ஆய்வாளர் சுதாகரன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் மகேந்திரன், கல்லூரி செயலர் டாக்டர். ஜெயக்குமார், சட்ட பேராசிரியர் பாசமலர், திட்ட அலுவலர்கள் டாக்டர் கதிரேசன், டாக்டர் மருதையா பாண்டியன், டாக்டர் அபுல்கலாம் ஆசாத், கவிதா திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பாலாஜி, திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் உட்பட காவல்துறையினர் கல்லூரி மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.

19,724FansLike
125FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வருவதால் தென்மண்டல ஐஜி நேரில் ஆய்வு

0
தென்காசி - டிச -06,2022 Newz - webteam தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வரின்‌‌‌ வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்களுடன் தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்...

போதையில்லா திருச்சியை உருவாக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் விழிப்புணர்வு மாரத்தான்‌‌‌ போட்டி….

0
திருச்சி - டிச -05,2022 Newz - webteam "போதைமில்லா திருச்சி மாநகரை உருவாக்க" மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாநகர காவல்துறை மற்றும் மொராய்சிட்டி இணைந்‌‌‌து நடத்‌‌‌தும்‌‌‌ மாரத்தான் ஓட்டம் திருச்சி...

போக்சோ வழக்கில் இனி கைது செய்ய கூடாது போலீஸ் கமிஷனர் எஸ்பிக்களுக்கு தமிழக டிஜிபி...

0
சென்னை - டிச -05,2022 Newz - webteam போக்சோ வழக்குகளில் கைது மற்றும் புலனாய்வு தொடர்பான சுற்றறிக்கை. உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக் குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை குழந்தைகளுக்கெதிரான பாலியல்...

நெல்லை தூத்துக்குடி குமரி மாவட்ட எஸ்பிக்களுடன் தென் மண்டல ஐஜி ஆலோசனை

0
திருநெல்வேலி - டிச -05,2022 Newz - webteam திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தனிப்படை காவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய தென் மண்டல காவல்துறை...

தென்காசி எஸ்பி அலுவலகத்தில் நெல்லை சரக டிஐஜி ஆய்வு

0
தென்காசி - டிச -02,2022 Newz - webteam தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறைத் துணைத் தலைவர் இன்று ஆய்வு மேற்கொண்டார் தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை ஒட்டி பாதுகாப்பு...

தற்போதைய செய்திகள்