தூத்துக்குடி – அக் – 09,2021
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற்று வருகிற இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு.
தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 1 வாக்குச்சாவடி, கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 3, ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் 6, திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 4, உடன்குடி ஊராட்சி ஒன்றித்தில் 1, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 1, ளகயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் 1, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் 12, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 4 மற்றும் புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 5, ஆகிய 10 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 38 வாக்குச்சாவடிகளில் (Polling Stations) இன்று இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
இதுதவிர தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட குருவிக்குளம் பஞ்சாயத்து யூனியனில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு, நாலாட்டின்புதூர் மற்றும் கழுகுமலை ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 42 வாக்குசாவடி மையங்களில் இன்று இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் உதவி காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துணை காண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்படி இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குசாவடி மையங்களுக்கும் நேரில் சென்று தேர்தல் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.