தேனி – அக் – 27,2021
செய்தியாளர் – செல்வகுமார்
சிறப்பாக பணிபுரிந்து 24 மணி நேரத்திற்குள் 9 சாமி சிலைகளை மீட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டுச் சான்றிதழ்
தேனி மாவட்டம் தேனி உட்கோட்டம் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட அரண்மனை புதூர் சத்திரப்பட்டி ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ வேதபுரி ஆசிரமத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி கோவிலில் கருவறைக்கு முன்பு உள்ள கல் மண்டபத்தில் வைத்து வழிபாடு செய்வது வந்த ஐம்பொன் சாமி சிலைகளை தாயுமானவர் மாணிக்கவாசகர் வியாசர் சனகர் சனதனர் சனந்தர் சமந்த குமார் நந்தி பலிபீடம் ஆகிய 9 ஐம்பொன் சிலைகள் மற்றும் கோவிலில் வைக்கப்பட்டிருந்த ஒரு பித்தளை உண்டியல் ஆகியவற்றை நேற்று 26 10 2021 தேதி அதிகாலை சுமார் 5 மணிக்கு முன்பாக கல் மண்டபத்தில் கிழக்குப் பக்க கண்ணாடி சுவர் உடைக்கப்பட்டு திருடப்பட்டது தொடர்பாக ஸ்ரீ வேதபுரி ஆசிரமத்தை சேர்ந்த மேலாளர் சுரேஷ் என்பவர் புத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் கு.எண்459/2021 பிரிவு 457 (2), 380 (2) இப்படி வழக்கு செய்யப்பட்டது இந்த தகவல் தெரிந்தால் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங் ரே பிரவீன் உமேஸ் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு அவரது உத்தரவின் பேரில் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் மற்றும் தடயம் அறிவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு சம்பவ தை முழுமையாக சோதனை செய்யப்பட்டது காவல் கண்காணிப்பாளர் இவ் வழக்கை விரைந்து கண்டுபிடிக்க வேண்டி தேனி உட்கோட்ட காவல் துணைகண்காணிப்பாளர் பால் சுதர் மற்றும் பெரியகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் முத்துக்குமார் மேற்பார்வையில் பிசி பட் டி காவல் ஆய்வாளர் மதன கலா பி சி பட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் அசோக் சுந்தரலிங்கம்மற்றும் பெரியகுளம் வடகரை காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ராமபாண்டியன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது தனி படைகளின் தீவிர முயற்சியால் 24 மணி நேரத்திற்குள்ளாக தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை மில்லர் ரோட்டை சேர்ந்த முருகன் மகன் ஸ்ரீதர் என்பவரை பெரியகுளம் கும்பகரை ரோடு காவல் குடிசை அருகே கைது விசாரணையில் செய்ததில் அவரும் பெரிய குளத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரும் சிலை திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார் அது ஒப்புதல் வாக்குமூலத்தின் படி ஒன்பது சிலைகளை இரண்டு சிலைகளை தக்ஷிணாமூர்த்தி கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் உள்ள புதரில் மறைத்துவைத்து விட்டு சென்றதாகவும் மீதமிருந்த 7 சிலைகளை பெரியகுளம் அருகே உள்ள அடுக்கம் ரோட்டில் தரைப்பாலத்தில் அடியில் புதரில் மறைந்து வைக்கப்பட்டதாகவும் செடி புதரில் மறைத்து வைக்கப்பட்டதாகவும் மேற்படி திருட்டு சம்பவத்தில் தனது யமஹா எஃப்இசட் வாகனத்தை பயன்படுத்தியதாகவும் ஒப்புக்கொண்டார் தனிப்படையினர் 9 ஐம்பொன் சாமி சிலைகளை மீட்டு திருட்டுக்கு பயன்படுத்திய வாகனத்தை கை பற்றினர் மேற்படி ஐம்பொன் சாமி சிலைகளின் தற்போதைய மதிப்பு சுமார் 20 லட்சம் ஆகும் சிலை திருட்டில் ஈடுபட்ட ஸ்ரீதர் என்பவர் மீது தேனி மாவட்ட பெரியகுளம் தென்கரை திருப்பூர் மாவட்டம் அன்னூர் பாளையம் ,தூத்துக்குடி தெற்கு ஆகிய காவல் நிலையங்களில் கொலை, சிலை திருட்டு ,அடிதடி, ஆயுத வழக்கு மற்றும் திருட்டு என 9 வழக்குகள் இருப்பது தெரியவருகிறது மேலும் இவர் தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலைய வழக்கு ஒன்றில் குண்டர் சட்டத்தில் அடைக்கபட்டு சமீபத்தில் வெளி வந்தது தெரியவந்ததது …. இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றி 24 மணி நேரத்திற்குள் கடத்தப்பட்ட 9 சாமி சிலைகளை மீட்டு குற்றவாளியை கைது செய்த தனிப்படை யினருக்கு திண்டுக்கல் சரக காவல் தலைவர் விஐயகுமாரி அவர்களும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங் ரே பிரவீன் உமேஷ் அவர்களும் பாராட்டுக்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்