தூத்துக்குடி – அக் – 27,2021
ஆழ்வார்திருநகரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட 80 வயது மூதாட்டியை மீட்ட ஆழ்வார்திருநகரி காவல் நிலைய காவலர் சதீஷ் என்பவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று வெகுமதி வழங்கி பாராட்டு.
ஆழ்வார்திருநகரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மாடகோவில் தெருவைச் சேர்ந்த பூல் என்பவரது மனைவி முத்தம்மாள் (80) என்பவர் இன்று சிவராமமங்கலம் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் விறகு வெட்ட சென்றுள்ளார். அப்போது ஆற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த ஆழ்வார்திருநகரி காவல் நிலைய காவலர் சதீஷ் உடனடியாக முத்தம்மாளை பத்திரமாக மீட்டுள்ளார்.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று மேற்படி காவலர் சதீஷை பாராட்டி வெகுமதி வழங்கினார். அப்போது ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன், ஆழ்வார்திருநகரி காவல் ஆய்வாளர் ஜூடி, தனிப்பிரிவு தலைமை காவலர் பூர்ணராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.