கன்னியாகுமரி – அக் -20,2021
குமரி மாவட்டம் முழுவதும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகனச்சோதனை நடைபெற்று வருகிறது . இந்நிலையில் நேற்று இரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் IPS திடீரென மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார் .மேலும் முக்கியமாக மாநில எல்லையான களியக்காவிளை , கோழி விளை , தலச்சன் விளை , வன்னி யோடு, மேக்கோடு, மாமூட்டுக்கடை சோதனைச்சாவடிகளில் கேரளாவிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்ட பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் அதுபோன்று குமரி மாவட்டத்திலிருந்து கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்தி செல்வதை தடுக்க காவலர்களுக்கு எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் பணி செய்ய அறிவுரை வழங்கினார். மேலும் சோதனைச் சாவடிகளில் காவலர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து காவலர்களிடம் கேட்டறிந்தார்.