திருநெல்வேலி – அக் -29,2021
பணியின் போது கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த ஊர்காவல் படையினர் குடும்பத்திற்கு ரூபாய் 75 ஆயிரம் உதவித்தொகை வழங்கி ஆறுதல் கூறிய நெல்லை மாநகர காவல் ஆணையாளர்
நெல்லை மாநகரத்தில் பணியின் போது கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த ஊர்காவல் படை காவலர் முருகன் குடும்பத்திற்கு, ஊர்காவல் படை வட்டார தளபதி சின்னராஜா மற்றும் மாநகர அனைத்து ஊர்காவல் படையினர் இணைந்து திரட்டிய ரூபாய் 75 ஆயிரத்தை, முருகன் அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளிடம் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப வழங்கி ஆறுதல் கூறினார்