கோயம்புத்தூர் – அக் -22,2021
SaKo (பாதுகாப்பான கோவை) சகோ(SaKo) (பாதுகாப்பான கோவை) என்பது வீடு உடைப்பு மற்றும் திருட்டுக்கு எதிராக பூட்டப்பட்ட வீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறையால் எடுக்கப்பட்ட தொழில்நுட்ப அடிப்படையிலான முயற்சியாகும்.கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., கோவை மாவட்டத்தை கொள்ளைச் சம்பவங்களற்ற மாவட்டமாக மாற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த மொபைல் செயலியை இன்று அறிமுகம் செய்து வைத்தார். இதற்கு SaKo (பாதுகாப்பான கோவை) எனப் பெயரிடப்பட்டது. இதற்கு முன்னதாக பொதுமக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியில் செல்லும்பொழுது நேரடியாக அந்தந்த காவல் நிலையங்களுக்கு நேரடியாக சென்று பாதுகாப்பு கோரிக்கையை எழுப்ப வேண்டும். இந்த செயல்முறையை எளிதாக்க, சகோSaKo செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை பதிவு செய்யலாம், மற்றும் கோரிக்கை சரிபார்ப்புக்காக தொடர்புடைய காவல் நிலையத்திற்கு அனுப்பப்படும். பொதுமக்கள் தங்கள் வீட்டின் பாதுகாப்பு குறித்து அறிந்துகொள்ள முடியும். இந்த முழு செயல்முறையும் மாவட்ட காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையால் கண்காணிக்கப்படும். தற்போதுசகோ(SaKo)செயலி பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை எளிதாக்குவதற்கான அம்சத்தை வழங்குகிறது. பொதுமக்கள் இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி அவர்கள் இல்லாத போதெல்லாம் தங்கள் வீட்டின் பாதுகாப்பு குறித்து அறிந்து கொள்ளலாம். பொதுமக்கள் வீடுகளில் இல்லாதபோது அவர்களின் வீடுகள் இருக்கும் இடம் இந்த செயலியின் மூலம் பதிவு செய்த பின் காவல் துறையால் பதிவு செய்யப்பட்ட இடம் ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு பின் காவல்துறையினர் வீட்டின் படத்தை இந்த செயலியில் பதிவேற்றுவார்கள். சாட்சியத்திற்காக, ஒவ்வொரு முறையும் வீட்டு கண்காணிப்பிற்காக செல்லும் போது எடுத்த வீட்டின் புகைப்படங்கள் காவல்துறையால் வீட்டின் உரிமையாளர்களுக்கு அனுப்பப்படும்.பொது மக்களும் மொபைல் செயலியின் மூலம் இதனை உறுதி செய்து கொள்ள முடியும். இந்த மொபைல் செயலி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்படி மூன்று வார காலத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிக்கும் மூன்று மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது
மேலும் காவல் துறையினருக்கு உதவும் வகையில், கண்காணிக்கப்பட வேண்டிய வீட்டினை எளிதாக அடையாளம் கண்டறிய வசதியாக இந்த செயலியானது கூகுள் மேப்புடன் இணைக்கப்பட்டுள்ளது .
இந்த செயலி வளர்ச்சிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி ஆசிரிய குழு ரதி, திநரேந்திரன், ஒருங்கிணைப்பாளர், டாக்டர் ஏ.கிரேஸ் செல்வராணி, (HOD-CSE), கணேஷ் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் என்.ஆர்.அலமேலு ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். பொதுமக்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு கோவை மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.