திருநெல்வேலி – அக் -09,2021
திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்ளாட்சி கிராம பஞ்சாயத்துக்கான தேர்தல் வாக்குபதிவினை நேரில் சென்று ஆய்வு செய்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
தமிழ்நாட்டில் 06.10.2021 தேதி அன்று 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தல் தேர்தல் நடைபெற்றது. இதனையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 4 யூனியனுக்குட்பட்ட நாங்குநேரி,வள்ளியூர், களக்காடு, இராதாபுரம் பகுதியில் தேர்தல் இன்று 09.10.2021 நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் IPS., வாக்குப்பதிவு மையங்களை நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். முக்கியமாக வாகைகுளம், மருதகுளம், மறுகால் குறிச்சி, நாங்குநேரி, மற்றும் முக்கிய பகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தேர்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றும் படி அறிவுரை வழங்கினார்.