திருநெல்வேலி – அக் – 11,2021
திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் புதிதாக தொடங்கியிருக்கும் ஆவின் பாலகத்தை திறந்து வைத்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள வளாகத்தில் பொதுமக்கள், காவல்துறையினர் பயன்படும் வகையில் புதிதாக ஆவின் பாலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இகா.ப ., பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அப்போது முதல் விற்பனையை தொடங்கி வைத்து உரையாற்றிய காவல் கண்காணிப்பாளர் புதிதாக தொடங்கியுள்ள ஆவின் பாலகத்தில் ஆவின் நிறுவனத்தை சார்ந்த பால், நெய், ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ்,இனிப்புவகைகள் அனைத்தும் விற்கப்படும் எனவும் பொதுமக்கள் அனைவரும் வாங்கி பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இத்திறப்பு விழாவில் தனிப்பிரிவு ஆய்வாளர் ராஜேஷ், திருநெல்வேலி மாவட்ட ஆவின் நிறுவன மேலாளர் சுந்தரவடிவேல், உதவி மேலாளர் சாந்தி, திருநெல்வேலி மாவட்ட மேலாளர் (MARKETING) அனுஷா சிங், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.