தேனி – அக் -27,2021
செய்தியாளர் – செல்வகுமார்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பு மகன் பாஸ்கரன் மற்றும் அவரது நண்பர் ரமேஷ் இவர்களுக்கு குடிப்பழக்கம் மற்றும் போதை வஸ்துகள் பயன்படுத்தும் பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் வருமானத்திற்காக இவர்கள் அரசு மதுபான கடைகளில் இருந்து அளவுக்கு அதிகமான மதுபானங்களை அரசு மதுபான கடைகளில் விற்பனையாளர் மற்றும் கண்காணிப்பாளர்களின் உதவியுடன் வாங்கிவந்து கள்ளச் சந்தையில் விற்று ஆதாயம் பார்த்து வந்தனர். தீபாவளி பண்டிகை உள்ளிட்ட தொடர் விடுமுறைகளால் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதற்காக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மது பாட்டில்களை வாங்கி வந்து கள்ளிப்பட்டி பகுதியில் உள்ள பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான பழைய தீப்பெட்டி குடோனில் பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்த நிலையில், காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் அறிவுறுத்தலின் படி விரைந்து சென்ற போலீசார் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பாஸ்கரனின் நண்பர் ரமேஷ் ஓடிவிடுவே எதிரியை தேடும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் கைலாசநாதர் கோவில் அருகே உள்ள ஸ்ரீ ஸ்ரீலால்பாபாஜி கோவில் அருகே வைத்து பிடித்தனர். மேலும் பாஸ்கரன் என்பவர் தலைமறைவாகிவிடவே, பாஸ்கரனை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.சட்டத்திற்கு புறம்பாக அரசு மதுபாட்டில்களை மலைபோல் குவித்து வைத்திருந்தது அப்பகுதி மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.